அதிக அளவு அந்நிய முதலீடுகள் வேண்டும்! – சீனா

வெளிநாட்டவர்கள் சீனா [^] வில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் டிரில்லியன் டாலர் அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் [^] மேம்பட வழிவகுத்துள்ளது.

“நியாயமான சந்தை முறையை உருவாக்கி அந்நிய முதலீடுகளை அதிக அளவில் கவரத் திட்டமிட்டுள்ளதாக,” பெய்ஜிங்கில் நடந்த சி.இ.ஓ.க்களின் கூட்டத்தில் துணை பிரதமர் [^] ஜாங் டெஜாங் தெரிவித்தார்.

பன்னாட்டு முதலீடு எப்பொழுதும் உலக பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை உயர்த்தும் உந்து சக்தியாகத் திகழ்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சீனாவில் இன்றைய தேதிக்கு 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்து கிடக்கிறது. 7 லட்சம் வெளிநாட்டுக் கம்பெனிகள் இங்கே கடை விரித்துள்ளன. ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ளவற்றில் 470 நிறுவனங்கள் சீனாவில்தான் உள்ளன.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே சீனாவின் ஏற்றுமதி 1.1 ட்ரில்லி்யன் டாலரைத் தாண்டிவிட்டது. Buy Viagra Online No Prescription 45 மில்லியன் வேலைவாய்ப்புகளைத் தரும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதியில் பாதியளவுக்கு பங்களித்துள்ளன.

Add Comment