உலகின் சிறந்த செய்தி ஒளிபரப்புக்கான விருதை அல் ஜஸீரா வென்றது

ஐக்கிய ராஜ்ஜியத்தில் தலைமையாக கொண்டு இயங்கும் சர்வதேசிய ஒளி மற்றும் ஒலிபரப்புக்கான சங்கம் 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கின்றனர். இது உலகெங்கும் ஊடகத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது.

திரைப்படங்களுக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் போன்று விருது கொடுப்பதை போல ஊடக துறையில் செய்தி ஒளி, ஒலிபரப்பு துவங்கி பல்வேறு துறைகளில் தரமானவைகளுக்கு விருது அளித்து வருகிறது. இந்த பட்டியலை உலகெங்கும் உள்ள பல்வேறு முன்னணி ஊடகங்களின் முக்கியமானர்கள் இதில் நடுவர்களாக கலந்துகொண்டு இதை சேர்வு செய்து உள்ளனர். இந்தியவை சார்ந்த என்.டி.டி.வி புகழ் ஜெய் சவ்ஹானும் இந்த நடுவர் குழுவில் உள்ளார்.

சர்வதேசிய அளவில் சிறந்த ஊடக துறைக்கான இந்த ஆண்டின் (2010 ) விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சம் மூன்று பரிந்துரைகள் சேர்வு செய்யப்பட்டது, அதில் ஒன்றிற்கு சிறந்தவைகான விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான வெற்றி பெற்ற மற்றும் வெற்றிக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல்..

தெளிவான முழு தழுவு அளவான ஒரு செய்தி நிகழ்வு (தொலைகாட்சி):

விருது வென்றவை:
அல் ஜஸீரா இங்கிலீஷ் (கத்தார்)
காஸாவிற்கு சென்ற நிவாரண கப்பல் தாக்கப்பட்ட நிகழ்வுகளை  முழு ஆதாரத்துடன், பொருத்தமான விருத்தினர்களை கொண்டு விவாதித்து முழுமையாக வெளியிட்டதிற்காக அல் ஜஸீரா இங்கிலீஷ் என்கிற  நிறுவனத்திற்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

விருதுவிற்கு பரிந்துரைக்கப்பட்டவைகள்:
* பிரான்ஸ் 24
தாய்லாந்த் தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் அதிக துணிவோடு போராட்டத்தின் பின்புறத்தில் நடப்பவைகளை படம்பிடித்து காட்டியதற்காக பிரான்ஸ் 24 நிறுவனத்திற்கு இந்த விருது பரிந்துரைக்கப்பட்டது.

*அல் ஜஸீரா இங்கிலீஷ்
தாய்லாந்த் தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற அதே போராட்டத்தில் சிறப்பாக முழு தழுவு அளவு செய்த அல் ஜஸீரா இங்கிலீஷ் நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

தெளிவான முழு தழுவு அளவான ஒரு செய்தி நிகழ்வு (வானொலி):

விருது வென்றவை:

பி.பி.சி உலக சேவை
ஹைத்தியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றிய செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி உலக சேவை இந்த விருதை வென்றது.

சிறந்த ஆக்கப் பணிக்கான விருது (தொலைக்காட்சி)

வென்றவை:
வி.ஆர்.டி (பெல்ஜியம்)
பரிந்துரைக்கப்பட்டவைகள்:
வைஸ் ஆப் அமெரிக்கா (அமெரிக்கா)
டபில்யோ.டி.ஆர் (ஜெர்மனி)

சிறந்த ஆக்கப் பணிக்கான விருது (வானொலி)

வென்றவை:
டிண்டேர்பாக்ஸ் உற்பத்தி (ஐக்கிய ராஜ்ஜியம்)
பரிந்துரைக்கப்பட்டவைகள்:
பி.பி.சி ((ஐக்கிய ராஜ்ஜியம்)
நெதர்லாந்து வானொலி (நெதர்லாந்து)

சிறந்த ஊடகத் தயாரிப்பிற்கு அர்டே பிரான்ஸ் வென்றி பெற்றுள்ளது. இதே பிரிவில் ரேடியோ buy Cialis online ப்ரீ ஆசியா மற்றும் பி.பி.சி உலக சேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  சிறந்த புதுவகை விற்பனையுக்திக்கான விருதை இலயைகையின் ஸ்ரீ பண்பலை நிறுவனம் வென்றுள்ளது.

சிறந்த உண்மை சார்ந்த குழந்தைகள் நிகழ்ச்சிக்கு பி.பி.சி நிறுவனமும், சிறந்த புலன் ஆய்விருக்கு ஐக்கிய ராஜ்யத்தின் க்ளோவர்  பிலிம்ஸ் வென்றுள்ளது.

சிறந்த வரலாற்று ஆய்விற்கான விருதை ஜெர்மனியின் டபில்யோ.டி.ஆர் நிறுவனம் வென்றுள்ளது. இந்த ஆண்டிற்கான தனித்தன்மைக்கான மனிதர் என்கிற விருதை ஸ்டீபான் சக்கூர் வென்றுள்ளார். முழு பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.

Add Comment