கடையநல்லூர் இஸ்லாமிய சகோதரர்களுக்கு…

அன்புமிக்க அனைத்து பேரியக்க கடையநல்லூர் இஸ்லாமிய சகோதரர்களுக்கு. முதலில் என் சாலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

என் போன்றவர்கள் நீண்ட காலமாக நமதூரில் நடந்து கொண்டிருக்கும் ஒழுக்கக்கெடான முறைகேடுகளுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்று ஏங்கி நிற்கின்ற நிலையில் உலாமா சபை மூலம் கூட்டப்படுகிற இந்த கடையநல்லூர் அனைத்து அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தை ஆர்வத்துடன் வரவேற்கிறேன்.

இதற்கு முன் நடந்து முடிந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டு வர முடியாமல் போனவகைக்கு என்ன காரணங்கள் என்பதை முதலில் ஆராயுங்கள் அது போன்ற காரணங்கள் மீண்டும் தலை தூக்காமலும் எடுக்கப்படும் Bactrim No Prescription செயல் திட்டம் செவ்வென நிறைவேறும் பொருட்டு தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நம் ஊரை நல்ல நிலமைக்கு கொண்டு வர நல்ல நெரிகளைக்கொண்ட ஒரு நேர் வழி பாதையென்ற அமைப்பு வேண்டும். அதில் செம்மையான நல்ல பல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து நடத்திச்செல்ல ஒரு நேர்மையான செயல் வீரர்கள் வேண்டும் அவர்களில் அப்பழுக்கற்ற உலமா பெருமக்களும் ஓய்வு பெற்ற சட்ட வல்லுனர்களும். அரசாங்கம் தலையிட்டாலும் அதற்கேற்ற ஆலோசனைகளை நமக்கு வழங்குவதுமில்லாமல் அணைவரோடும் வந்து அதை சந்திக்கும் திறன்கொண்ட ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்திருக்க வேண்டும் குறிப்பாக தொலைத்தொடர்பு துறையில் ஓய்வு பெற்றவர்களும் அக்குழுவில் இடம்பெற வேண்டியது மிக அவசியம் மொத்தத்தில் நம் சமுதாயத்திற்காக தியாக மனபான்மை கொண்ட நல்ல நெஞ்சங்ளை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும்

நீதீயை நிலைநாட்டுவதில் ஒவ்வொரு வீட்டிலும் நீதீவான்கள் தோன்றிட வேண்டும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு தெருவிலும்;;. ஒவ்வொரு பகுதியிலும் நீதிவான்கள்; தேர்ந்தெடுக்க வேண்டும் தேர்ந்தெடுப்பவர்கள் தொழுகையாளியாக இருப்பது மிக அவசியம் தொழுகையாளி என்றால் ஹஜ் செய்த பின்னும் அதை இழந்தவராக இருக்ககூடாது. தொழுகையாளியாக இருந்துகொண்டு வட்டி வாங்குபவராக இருக்க கூடாது தொழுது கொண்டு நன்னெறி தவறிய அமைப்பு தலைவராகவும் இருக்ககூடாது பணக்காரர் பதவியில் இருக்கிறார் என்பதற்காக அவர் கடந்து வந்த பாதையை மறந்து பதவி கொடுத்துவிடக்கூடாது நாளைய நடுவர் கேள்வியில் கூனிப்போகாமல் தலை நிமிர்ந்து பதில் சொல்ல தகுதியுடையவராய் இருக்கவேண்டும் இளஞனாக இருந்தாலும் இறையச்சம் உள்ளவனாக இருக்கவேண்டும்

புதிய அமைப்பு ஏற்படுத்திய பின்னால் முதலில் சந்திக்கும் பிரச்சினை இதற்கு முன்பு நடந்து முடிந்து நார்மலாகிப்போன ஒழுக்கம் கெட்டுப்போன பிரச்சினை அவைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படாத நிலையில். இனி ஏற்படும் ஒழுக்ககேடான பிரச்சினைகளுக்கு தீர்ப்பளிப்பது எப்படி? என்;பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும்.

கட்டப்பஞ்சாயத்தை தடைசெய்துள்ள அரசாங்கத்தை அனுகும் எதிராளிகளை எவ்வாறு கையாளுவது என்பதனை அவசியம் ஒரு முடிவான முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும். இதன் காரணமாக கைதாகி சிறை செல்பவர்களை விடுவிக்கவோ, இவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவோ வேண்டிய பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டுவது என்பதனை ஆரம்பத்திலே ஆய்வுசெய்து கொள்ள வேண்டும்

நம் ஊரில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றல்ல இரண்டல்ல யாரோ யாருடனோ ஓடிப்போன பின்புதான் நமக்கு தெரியவருகிற ஒழுக்ககேடான விஷயங்கள் என்கிற நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் வெளியே தெரியாத ஓராயிரம் பிரச்சினைகள் நம் ஊருக்குள் அக்கம் பக்கத்துக்கு தெரியாமல் காதோடு காதாக நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். வெளியே வராத விஷயங்கள் பற்றி நமக்கு எதுக்கென்று நாம் விட்டுவிட முடியாது. களையை ஆரம்பத்திலே கிள்ளியெறிவது மிக அவசியம்

பிள்ளையைப்பற்றி தாயிக்கு தெரிந்து நடந்து கொண்டிருக்கிற சில தவறுகள் தகப்பனுக்கு தெரிந்து விடக்கூடாதே என்று மறைத்துக்கொண்டு இன்னும் சில வீடுகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற தப்புத்தாளங்கள் ஏராளம். தகப்பனுக்கு தெரிந்த தன் மகன் அல்லது மகளைப்பற்றிய தவறான விஷயங்கள் வெளியே சொல்ல முடியாதவை நிறையவே புதைந்து கிடைக்கிறது குறிப்பாக கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகளுடன் இருக்கிற எத்தனையோ பெண்கள் இன்னும் கல்யாணத்திற்கு முன்னால் காதலித்த வாலிபர்களுடன் அல்லது கல்யாணம் செய்து பிள்ளை பெற்ற ஆண்களுடன் தொலைபேசிகள் மூலம் தொடர்புகளை நிலைநாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெற்றோர்களால் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தங்களுக்குள்ளே போட்டு புகைந்து கொண்டிருக்கும் பூதகரமான இவர்கள் விஷயத்தை பாதிக்கப்பட்ட தாய் தந்தையரிடமிருந்து எவ்வாறு வெளிக்கொண்டு வருவது எந்தவிதமான அனுகுமுறையை கையாண்டால் இருதரப்பினரின் பிரச்சினைகளை இழிவு ஏற்படாமல் கண் காணித்து தண்டனை கொடுப்பது என்பது பற்றியும் ஒரு ஆளமான முடிவுக்கு வந்தாக வேண்டும். இல்லையானால் இதன் கதை முடிவு பெறாமல் தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் இது போன்ற பிரச்சினைகளை தனியொரு அமைப்புக்கு தகவல் தெரியப்படுத்தும் பட்சத்தில் அவர்கள் அமுக்கமாக தண்டனை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நாம் இங்கு மனதில் கொள்ளவேண்டும் தனியொரு அமைப்பு செய்து வரும் இவ்வாரான விஷயங்களை கடையநல்லூருக்கு நல்ல வழி காட்டுவதற்கென்று அமைக்கப்படும் ஒரு போது அமைப்பு அவ்வாறு செய்ய இயலாதென்று தட்டிக்கழித்து விடக்கூடாது.

தெருக்களில் பழம் விற்பனை செய்பவர்கள் முதல் மிட்டாய் விற்பனை செய்பவர்கள்வரை கண் காணிக்கப்பட வேண்டும். எச்சரிக்கப்பட வேண்டும். நடமாடும் கோர்ட்டுபோல் சிரிது காலத்திற்கு சர்வாதிகார அமைப்பு இல்லாத சமுதாய ஆட்சி இந்தக் கடையநல்லூரில் நடந்துதான் ஆகவேண்டும் நான் நல்லா இருந்தால்தான் என் வீடு நல்லாயிருக்கும்; என் வட்டாரம் நல்லாயிருக்கும் என் தெரு நல்லாயிருக்கும் என் பகுதி நல்லாயிருக்கும் என் கடையநல்லூர் நல்லாயிருக்க முடியும் என்கிற ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவதற்காக குன்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் ஒரு தேதியை அறிவித்து ஊர்முடக்கம் செய்வதுபோல் ஒவ்வொரு விட்டிலுமுள்ள ஒவ்வொரு குடிமகனும் கூட்டத்தில் கலந்து கொள்கிற அளவுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் அங்கு பரிசிலிக்கப்பட்டு எடுக்கிற முடிவுகள் பறையடிக்கப்பட்டு பச்சை குழந்தைகளின் மனதிலும் தண்டனை குறித்து பதிய வைக்க வேண்டும்

ஏற்கெனவே வட்டாரத்தின் நண்மை தீமைக்காக நிர்வகிக்கப்பட்ட வட்டாரக்கமிட்டிகள் அந்த வட்டாரத்தின் வசதியானவர்களையோ அல்லது குடும்ப எண்ணிக்கை கூடுதல் பொருத்தோ அல்லது கீழக்கட்சி மேலக்கட்சி என்ற அடிப்படையில் அமைந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. நமக்கு தேவை நீதீவான்கள் நேர்மை தவறாதவர்கள் அப்பழுக்கற்றவர் நமக்கு வேண்டும்

வட்டாரங்கள் தோறும் இயங்கிக்கொண்டிருக்கும் சங்கங்கள் எவ்வாறு செயல் படுகின்றன அதில் உறுப்பினர்களாக இருக்கும் வாலிபர்களின் எவ்வாறு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலுள்ள சிரியவர்கள் அமைப்புகளால் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த ஒரு அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டு வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறையாவது இஸ்லாமிய நெறிமுறைகள் பண்பாடுகள் ஒழுக்கங்கள் கற்றுக்கொடுக்க வழிவகைகள் செய்து தரப்படவேண்டும். ஏற்கெனவே பள்ளிகளிலும் மதறஸாக்களிலும் கற்றுத்தருகிறார்கள் என்று கவனம் கொள்ளாமல் இருக்கமுடியாது. அங்கெல்லாம் அவரவர்களின் கோட்பாடுகளும் கொள்கைகளும்தான் பிரிவினையாக போதிக்கப்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது

நமக்கு தேவை ஒற்றுமையான சமுதாயம். நமக்கு தேவை ஒழுக்கங்கள் பேணும் ஒரு புதிய தலைமுறை. நமக்கு தேவை இறையச்சத்தை பேணி நடக்கும் இஸ்லாமியர்கள. இவைகளை உருவாக்கி தரும் பொருப்பு இந்த கடையநல்லூரில் பிறந்த பிறக்கின்ற ஒவ்வொரு முஸ்லீமுக்கும் உண்டு என்பதை எல்லோரும் ஆளமாக மனதில் கொண்டு நல்ல முடிவுகளை எடுத்து நாமும் நமது கடையநல்லூரும் நாட்டிலுள்ள நம் இஸ்லாமிய பெரும் மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாய் அமைந்திட வல்ல இறைவனை இருகரமேந்தி பிராத்தித்தவனாய் நிறைவு செய்கிறேன்

செங்கோட்டையன்
ஹாஜாமுகைதீன்

Add Comment