சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். ?

சேவை செய்ய கவுரவம் பார்க்கக் கூடாது…: செருப்பு துடைத்து ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் செல்வகுமார்: நான் லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பெற்றோரை அனாதை இல்லத்திலும், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்திலும், சேர்த்துவிட்டு உறுத்தலின்றி இருக்கும் மனிதர் களை பார்க்க வெறுப்பாக இருந்தது. ஆதரவற்ற முதியவர்களுக்கு ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. அப்போது தான், கருணைக் கரங் கள் என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். அதன் மூலம் ஊனமுற்றவர்களுக்கு உதவியும்,சிறப்பாகச் செயல்படுகிற இல்லங் களுக்கு விருதுகளும் கொடுத்து ஊக்குவித்தோம். உழைத்து வாழக்கூடிய ஊனமுற்றோருக்குச் சேவை செய்கிறவர்களுக்கு, “கருணைச் சுடர்’ என்ற விருதும், சாதனை புரிந்த ஊனமுற்றோருக்கு, “சாதனைச் சுடர்’ என்ற விருதும் வழங்கி Buy cheap Doxycycline கவுரவித்தோம். ஒரு விழாவில் அங்கு வந்த ஒரு நபர், “நீங்கள் தனிப்பட்ட முறையில் முதியவர்களுக்கு என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டார். அந்த கேள்வி என்னை உறுத்தியது. அப்போது எடுத்த முடிவு தான், விடுமுறை நாட்களில், மக்களின் காலணிகளைத் துடைத்து, அதன் மூலம் வரும் வருமானத்தை, உடல் ஊனமுற்றோர் நல்வாழ்விற்காக செலவிடப் போறேன்னு கூறினேன். அவர் நெகிழ்ந்து விட்டார். பொன்னேரி பஸ் நிலையத்தில் என் முதல் பயணம் தொடங்கியது. முதல் நாள் என்னை, எல்லாரும் ஏளனமாகப் பார்த்தனர். நான் அவர்களை அலட்சியப்படுத்தி விட்டு, என் பணிகளை தொடர்ந் தேன். ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு என் வேலையை ஆரம்பித்தால், முடிவதற்கு இரவு 7 மணி ஆகிவிடும். உடனே அந்த வருமானத்தை, அங்கு இருக்கிற இல்லங்களில், எல்லார் முன்னிலையிலும் ஒப்படைத்து விடுவேன். நான் செருப்பைச் சுத்தம் செய்கிற போது, அதைப் பார்வையிட வரும் பிரமுகர்களும், இப்போதெல்லாம் என்னோடு சேர்ந்து சுத்தம் செய்ய ஆரம் பித்து விடுகின்றனர். இது என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

Add Comment