கடையநல்லூர் இஸ்லாமிய சமூகத்திற்கு..

அஸ்ஸலாமுஅலைக்கும்,

இன்று நமது சமுதாயம் அடைந்து கொண்டிருக்கும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும்
கண்கூடாகக் காணும் போது, இதயத்தில் ஈமானை சுமந்திருக்கும் ஒவ்வோர்
முஸ்லிமுக்கும் குருதியில் உஷ்ணம் தானாகவே ஏறிவிடும். இந்த சமுதாயத்தை
சீர்கெடுக்க வேண்டும் என்பதற்காக பல நூற்றாண்டுகளாக எதிரிகள் தீட்டிய
சதிக்கு இந்த நூற்றாண்டில் நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம், என்பதை
நினைக்கும் போது மனம் வேதனையில் துடிக்கிறது. ஆம் மார்க்கத்தை முறையாக
புகட்டி வளர்க்காததினால் எதிரியின் சூழ்ச்சிகளுக்கு நம் பெண்
பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும், இரையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
. எப்பாடுபட்டேனும் இந்தச் சமூக்க் கொடுமையை, தீமையை தடுத்து
நிறுத்தியாக வேண்டும். இன்னும் எத்தனை பெற்றோர்கள் தங்களை பிள்ளைகளை
மாற்றாருக்குத் தாரைவார்க்கப் போகின்றனரோ? என்ற பீதியில் நமது சமுதாயம்
உரைந்து போய் நிற்கின்ற இந்த சமயத்தில் இந்த மாதிரி கூட்டம் ஏற்பாடு
செய்த ஜமாதுல் உலமா சபைக்கு என்னுடைய நன்றிகள். நமதூரிலும்
நமதூரைச்சார்ந்தவர்கள் பணியாற்றும் வெளிநாடுகளிலும் இது போல் ஆலோசனை
கூட்டங்கள் பல நடத்தப்பட்டு விட்டன. சமீபத்தில் கூட இஸ்லாமிய பெண்கள்
அறகட்டளை சார்பில் ‘ இஸ்லாமிய பெண்கள் மாநாடு’ இரண்டு மாதங்களுக்கு
முன்பாக நடைபெற்றது. இது போன்ற எல்லா முயற்சிகளும் சமூக விழிபுணர்வை
நோக்கிய பயணங்கள்தாம் என்றாலும் சமூக சீர்கேடுகள் குறைந்துள்ளனவா
என்றால்.. இல்லை Bactrim online என்ற முடிவிற்கே நம்மால் வரமுடிகிறது. ஏன் என்பது
ஆராயப்பட வேண்டும். இதுவரை நடைபெற்ற ஆலோசானை கூட்டங்களில் எடுக்கப்பட்ட
முடிவுகள் ஏன் செயலாக்கம் பெறவில்லை என்பதும் ஆராயப்படவேண்டும்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது :
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள்
மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட
இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள்.

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை,
அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்.
இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை
கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு
அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும்
பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)

இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு
பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில்
விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே
உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு
எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை
என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும்
மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு
மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)

ஆனால் இன்று பால்காரர், பலசரக்கு வண்டிக்காரர், ஆட்டோகாரர், துணிகள்
சலவை செய்பவர், இஸ்திரி செய்பவர், துணிகள் விற்பவர் என்று பல வழிகளில்
மாற்று மதத்தினர் நமதூர் பெண்களை தொடர்பு கொள்கின்றனர். நமதூர்
பெண்களில் பலர் அவர்களிடம் செல்போனிலும் தொடர்பு கொள்கின்றனர். இந்த
கொடுமை வளர்ந்து மீளா படுகுழியில் தள்ளி விடுகிறது.

பெற்றோர்களின் கடமை என்ன?

இன்று பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இலட்சக் கணக்கில் செலவு செய்து
தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பும் பெற்றோர்கள், அல்லாஹ்வையும்
அவனின் திருத்தூதரையும் அவர்களுக்கு நினைவூட்ட மறுப்பதினால், கல்லூரிப்
படிப்பை முடித்து கை நிறைய சம்பாதித்து பெற்றோகளின் கைகளை நிரப்ப வேண்டிய
அவர்கள்,மாற்றாருடன் கைகோர்த்துக் கொண்டு தவறான உறவால் வயிற்றில் கருவை
நிரப்பியவர்களாக. மார்க்கத்தையும், பெற்றோரின் ஏக்கத்தையும்
பொருட்படுத்தாது, நெருப்பைக் கண்ட ஈசல்களைப் போல நரகை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆம் நம் பிள்ளைகள் மாற்று மதத்தவரோடு ஓடக் காரணம் நம் பெற்றோர்கள்தாம்.
சிறுவயதிலேயே அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அச்சத்தை விதைப்பது
பெற்றோரின் மீது கடமை. ஏழு வயதை அடைந்து விட்டால் தொழுகையைக் கொண்டு ஏவ
வேண்டும். பத்து வயதை அடைந்தும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடித்து
தொழும்படி ஏவ வேண்டும். இதை செய்யத் தவறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை
மாற்று மதத்திற்கு மாற அனுமதி கொடுத்துவிட்டார்கள் என்றுதான்
அர்த்தமாகும். ஏனெனில் பிள்ளைகள் கவனித்து, கண்டித்து வளர்க்கப்பட
வேண்டிய வயது 10 முதல் 15 வயது வரைதான்.இதற்குள் அவர்கள்
பக்குவப்படுத்தப்பட வேண்டும். தொழுகையை விடுபவன் மார்க்கத்தையே விட்டவன்
என்ற உள்ளச்சத்தையும், குர்ஆன் ஓதத் தெரியாதவன் அல்லாஹ்வின் வெறுப்புக்கு
ஆளாவான்.என்ற பயத்தையும் அவர்களின் இதயத்தில் பசுமரத்தாணி போல் பதியச்
செய்ய வேண்டும்.

நம் வாழ்வின் வழிகாட்டி குரானும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் தான்
என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.கடைசி மூச்சிருக்கும் வரை எந்தச்
சூழ்நிலையிலும் தொழுகைய விடாது தொழ வேண்டுமென அன்போடு ஆணை பிறப்பிக்க
வேண்டும். பருவ வயது அடையும்முன் அவர்களை இறைவழியில் செல்லத்தூண்டிக்
கொண்டிருக்கும் பெற்றோர்கள், அவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால்
தாங்களாகவே அனைத்து நல் அமல்களையும் செய்வதையும், பெற்றோர்களுக்கு
பணிந்து நடப்பதையும் கண்குளிரக் காண்பார்கள்.

ஆனால் குழந்தை வளர்ப்பை வெறும் உலக ஆதாயத்திற்காகப் பயன் படுத்தும்
பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதக்கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக
தொலைக் காட்சிப்பெட்டி முன் அமர்ந்து அதில் தோன்றும் நடிகை நடிகர்களின்
பெயர்களையும்,திரையரங்குகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று அருவருப்பான
கட்சியை பெற்றோர்முன் அமர்ந்து எப்படிப் பார்ப்பது? அந்நிய ஆண்களையும்,
அந்நியப் பெண்களையும் அரைகுறை ஆடைகளோடு எப்படிப் பார்த்து ரசிப்பது?
என்பதையும், கற்றுக் கொடுப்பார்கள். தங்கள் மரணத்திற்குப் பின்னால்
உதவும் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பதிலாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக
இருக்க வேண்டும் என்ற நொண்டிச்சாக்கை கூறி மார்க்கக் கல்வியை புறம்
தள்ளிவிட்டு உலகின் ஆதாயத்தை மட்டும் சம்பாதிக்கும் கல்வியைக் கற்றுக்
கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். பருவமடைந்த பெண்பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற
தனி பள்ளிகள்,கல்லூரிகள் இருப்பின் தாராளமாக படிக்க வைக்கலாம். ஆனால்
அதற்கேற்றச் சூழல் இல்லாதிருப்பின் கண்டிப்பாக இருபாலாரும் இணைந்து
படிக்கும் படிப்பை நிருத்திடுவது பெற்றோரின் மீது கடமையாகும்.

இந்தச்சூழலில் படிக்க வைக்கும் பெற்றோர் உலக ஆதாயத்தை மட்டும் நோக்கமாகக்
கொண்டுதான் படிக்க வைக்கின்றனர். என்பதில் எவருக்கும் மாற்றுக்
கருத்திருக்க முடியாது. இவ்வாறு படிக்கும் பெண்பிள்ளைகள் மார்க்கத்தின்
போதனைகளை மறந்தும் கூட பின்பற்ற மாட்டார்கள். கயவர்களின் காதல் வலையில்
எளிதில் சிக்குவதோடு,மார்க்கத்தின் எல்லையையும் தாண்டத் தயங்க
மாட்டார்கள்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். போனில்
யாருடன் பேசுகிறார்கள், யாருடன் நட்பு பாராட்டுகிறார்கள், இணைய தளத்தை
எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணித்து முறைப் படுத்த
வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக பிள்ளைகளை இஸ்லாமிய வழிமுறையில் வளர்க்க
வேண்டும். இறையச்சத்தை ஊட்டி வளர்க்க வேண்டும்.

இயக்க முன்னெடுப்புகளை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு இந்த விசயத்தில் எல்லா
அமைப்புகளும் கலந்துகொண்டு இந்த சமூக தீமையிலிருந்து நாம் சமூகத்தை காக்க
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

நம்பிக்கையுடன் ….

முஹம்மது உவைஸ்.

Add Comment