2005 ஆம் ஆண்டு இந்தியாவில் சிகிச்சை கிடைக்காமல் இறந்த குழந்தைகள் 14 லட்சம் பேர்

முறையான சிகிச்சை கிடைக்காமல் கடந்த 2005 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் இறந்து போனதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ரெஜிட்ரர் ஜெனரல் ஆஃப் இந்தியாவின் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு சுகாதாரத்துறையின் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

முறையான சிகிட்சைகள் மூலம் குணப்படுத்த இயலும் எனக் கருதப்படும் நிமோனியா, எடைக்குறைவு, பிரசவ சிகிட்சையில் ஏற்படும் குறைபாடுகள், வயிற்றுப்போக்குடன் கூடிய வாந்தி(காலரா), குறைமாத பிரசவம் ஆகியவற்றின் மூலமாகத்தான் பிஞ்சுக் குழந்தைகள் இறந்ததாக இந்த ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மரணித்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 23 லட்சமாகும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஒன்று முதல் 59 மாத பருவமான குழந்தைகள்தான் மரணித்தவர்கள்.

மருத்துவ இதழான லான்செட்டில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் மரணிக்கும் பொழுது, 13 லட்சம் குழந்தைகள் பிறந்து 5 வருடத்திற்குள் பல்வேறு காலக்கட்டங்களில் Buy cheap Cialis மரணிக்கின்றனர். ஐந்து வயதிற்குள்ளாக மரணிக்கும் உலகின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட 20 சதவீதம் கூடுதலாகும் இது.

பிறந்து ஒரு மாதத்திற்குள் மரணிக்கும் குழந்தைகளில் பெரும்பாலோர் ஆண் குழந்தைகளாவர். ஆனால், ஒரு மாதம் கழித்து மரணிக்கும் குழந்தைகளில் பெரும்பாலோர் பெண் குழந்தைகளாவர்.

இந்தியாவில் குழந்தைகளின் மரண எண்ணிக்கை போதுமான அளவில் குறையவில்லை என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ரெஜிட்ரர் ஜெனரல் ஆஃப் இந்தியா மட்டுமல்லாமல் செண்டர் ஃபார் க்ளோபல் ஹெல்த் ரிசர்ச்சின் பேராசிரியர் பிரபாத் ஜா, சண்டிகரின் போஸ்ட் க்ராஜுவட் இன்ஸ்ட்யூடின் பொதுமக்கள் ஆரோக்கியத் துறையின் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களாவர்.

Add Comment