இன்று முதல் அரசு பொது மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி இலவசமாக போடப்படுகிறது!

சென்னையில் 12 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. கோவையில் 10 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். வேலூரில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு ‘டாமி புளு’ மாத்திரை கொடுக்கப்படுகிறது.
சென்னையில் 12 பேர் பாதிப்பு:  அரசு பொது மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி இன்று முதல் இலவசமாக போடப்படுகிறது
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 லட்சம் மாத்திரைகள் தயாராக உள்ளன. பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி மருந்தும் உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதை போட்டுக் கொள்ள ரூ. 500 வரை செலவு ஆகும். சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் இன்று முதல் இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Doxycycline online style=”text-align: justify”>
இதற்காக 25 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் பன்றிக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை. என்றாலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கான ‘டாமிபுளு’ மாத்திரை தேவையான அளவு உள்ளது. இது போல பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி மருந்தையும் தேவையான அளவு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மருந்து வந்ததும், முக்கிய அரசு மருத்துவ மனைகளிலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி இலவசமாக வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Add Comment