ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசன்ஸ் வாங்கிய நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரணை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்து கொண்டு உரிமம் வாங்கிய நிறுவனங்களின் பின்னணி, நிதி ஆதாரம் உள்ளிட்டவைகுறித்து வருமான வரித்துறை விசாரணை [^] யில் இறங்கியுள்ளது.

இவர்களில் சிலர் மீது லஞ்சம் கொடுத்தது, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் வைத்திருப்பது உள்ளிட்ட புகார் [^] கள் எழுந்துள்ளன. இதையடுத்து வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர்களது லாபக் கணக்கு உள்ளிட்டவை தீவிரமாக ஆராயப்படுகிறதாம்.

Buy Bactrim style=”text-align: justify;”>வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவும் இந்த விசாரணையில் உதவி செய்து வருகிறது.

2ஜி லைசன்ஸ் நிறுவனங்களில் யுனிடெக் வயர்லெஸ் லிமிட்டெட், லூப் டெலிகாம், எஸ் டெல், டேட்டாகாம் சர்வீஸஸ் (இப்போது வீடியோகான் மொபைல்), டிபி குரூப் ஆதரவுடன் கூடிய ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி டெலிகாம்) ஆகியவை முக்கியமானவை.

Add Comment