ஈசியாக நுழைந்த நியூசிலாந்து!

உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ள 32 அணிகளிலும் மிக எளிதாக தகுதி பெற்ற ஒரே அணி நியூசிலாந்து மட்டும்தான்.

ஓசியானியா பிரிவில் இடம் பெற்று உலகக் கோப்பைப் போட்டிக்கு வந்துள்ளது நியூசிலாந்து. தகுதிச் சுற்றுப் போட்டிகளில், இந்தப் பிரிவில் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து.

முதல் கட்டத்தில், 10 அணிகள் இடம் பெற்றிருந்தன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. முதல் பிரிவில் குக் தீவுகள், பிஜி, நியூ கலிடோனியா, தஹிதி, தூவலு ஆகியவையும், 2வது பிரிவில் அமெரிக்கன் சமோவா, சமோவா, சாலமன் தீவுகள், டோங்கா, வனடு ஆகியவை இடம் பெற்றன.

இந்த முதல் கட்டத்தில் நியூசிலாந்து இடம் பெறவில்லை.

2வது கட்டத்தில் நியூசிலாந்து இடம் பெற்றது. அத்துடன், பிஜி, வனடு, நியூ கலிடோனியா ஆகியவை இடம் பெற்றன.

இந்த நான்கு அணிகளில், நியூசிலாந்து அணி பிஜியை 2-0 என்ற கணக்கிலும், வனடுவை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. பின்னர் நியூ கலிடோனியாவை 3-1 என்ற கணக்கிலும் வென்றது.

2வது சுற்றில், நியூ கலிடோனியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய நியூசிலாந்து, வனடுவை 4-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால் பிஜியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்ததால் ஓசியானியா பிரிவில் சாம்பியன் ஆனது நியூசிலாந்து.

இதையடுத்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் இறுதியான போட்டியில் பஹ்ரைனை சந்தித்தது நியூசிலாந்து. இது இரண்டு போட்டிகளை உள்ளடக்கியது. இதில், முதலில் பஹ்ரைனின் மனாமா நகரில் முதல் போட்டி நடந்தது. 2வது போட்டி நியூசிலாந்தில் நடந்தது.

மனாமா போட்டியல் Ampicillin online இரு அணிகளும் கடைசி வரை கோல் அடிக்காததால் டிரா ஆனது.

இதையடுத்து நியூசிலாந்து போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இதில் முதல் பாதி ஆட்டம் முடிய சில விநாடிகள் இருந்தபோது நியூசிலாந்தின் ரோரி பாலோ ஒருகோல் அடித்தார். 2வது பாதியில்இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. இதையடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்று 2வது முறையாக உலகக்கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதல் முறையாக 1982ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து விளையாடியிருந்தது. தற்போது விளையாடப் போவது 2வது முறையாகும்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தர வரிசைப் பட்டியலில் நியூசிலாந்து 78வது இடத்தில் இருக்கிறது.

Add Comment