ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரை, மண்எண்ணை, பருப்பு வகைகள், பாமாயில், இலவச அரிசி போன்றவை வழங்கப்படுகிறது.

2011 டிசம்பர் மாதத்துடன் ரேஷன் கார்டுகளில் பொருட்கள் பெறுவதற்கான காலக்கெடு முடிந்தது. 2012 ஜனவரி மாதத்தில் இருந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும்.

குடும்ப அட்டைகளை புதுப்பிக்க ஜனவரி- பிப்ரவரி ஆகிய 2 மாதங்கள் கால அவகாசம் கொடுக் கப்பட்டன.

குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று அட்டைகளை புதுப்பித்தனர்.

ஆனாலும் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து மார்ச் 31-ந்தேதி வரை ஆன்-லைன் மூலமாக புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் ஒரு கோடியே 94 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கார்டுகளை புதுப்பித்தனர். சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகள் புதுப்பிக் கப்படவில்லை. இந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்த 4 லட்சம் ரேஷன் கார்டுகளும் தகுதியற்ற கார்டுகளாக அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்படுகிறது. இதில் போலி ரேஷன் கார்டுகளும் இருக்கலாம். தகுதியானவர்களும் ஏதோ ஒரு காரணத்தால் புதுப்பிக்காமலும் இருந்திருக்கலாம். அதனால் அவற்றை போலி கார்டு என்று கூறமுடியாது என்று துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், புதுப்பிக்காத 4 லட்சம் ரேஷன் கார்டுகள் மூலம் அரசுக்கு பலகோடி மதிப்புள்ள பொருட்கள் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் தகுதியான கார்டுகளுக்கு மீண்டும் குடும்ப அட்டை கிடைக்க அரசு வழி செய்துள்ளது.

புதுப்பிக்க தவறியவர்கள் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அவற்றை ஆய்வு செய்து புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்றார்.

Cialis online justify” align=”justify”>source:Nakkeeran

Add Comment