வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் “முதல்’ தங்கம் வென்று சாதனை

ஆசிய விளையாட்டு, டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப் Buy cheap Levitra பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற சாதனை படைத்தார் சோம்தேவ் தேவ்வர்மன். ஏற்கனவே இரட்டையரில் தங்கம், குழுப்பிரிவில் வெண்கலம் வென்ற இவர், மொத்தம் 3 பதக்கம் கைப்பற்றி அசத்தினார்.

சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று ஆண்கள் ஒற்றையர் டென்னிசின் பைனல் நடந்தது. இதில் சர்வதேச தரவரிசையில் 106 வது இடத்திலுள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 44வது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ் 6-1 என எளிதாக வென்றார். இரண்டாவது செட்டில் இஸ்டோமின் பதிலடி தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் சோம்தேவ் தேவ்வர்மனின் அதிரடி ஆட்டத்துக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் சோம்தேவ் 6-1, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற முதன்முறையாக ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று, வரலாறு படைத்தார். இதற்கு முன் ஆசிய விளையாட்டில் லியாண்டர் பயஸ் (ஹிரோஷிமா, 1994), மகேஷ் பூபதி (பாங்காங்க், 1998), ஸ்ரீநாத் பிரகலாத் (பாங்காங்க், 1998) ஆகியோர் வெண்கலம் மட்டுமே வென்று இருந்தனர்.

மூன்று பதக்கம்:நேற்று ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற இவர், ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் சனம் சிங்குடன் சேர்ந்து, தங்கம் வென்று இருந்தார். தவிர, குழு போட்டியில் இந்தியாவின் கரன் ரஸ்தோகி, சனம் சிங், விஷ்ணு வர்தனுடன் இணைந்து சோம்தேவ் வெண்கலம் வென்று இருந்தார்.

சோம்தேவ் மகிழ்ச்சி:இது குறித்து சோம்தேவ் கூறுகையில்,”” ஆசிய போட்டியில் இரண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் யாரும் இங்கு வருவதில்லை. இளம் வயதில் இந்தியாவுக்காக விளையாட, எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஒற்றையர் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அதிலும் தேசத்துக்காக தங்கம் வென்றது, கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதி, எனக்கு மறக்க முடியாக வகையில் அமைந்துள்ளது. முதலில் சர்வதேச தரவரிசையில் “டாப்-100’ல் இடம் பெற்றது, அடுத்து ஆசிய போட்டியில் இரண்டு தங்கம் என, எல்லாமே சிறப்பாக இருந்தது. இவ்வாறு சோம்தேவ் கூறினார்.

பயிற்சியாளர் மகிழ்ச்சி:சோம்தேவின் தனி பயிற்சியாளர் மெக்கெய்ன் கூறுகையில்,”” கடந்த ஐந்து ஆறு மாதங்களாக சோம்தேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். “டாப்-100′ ல் இடம் பெற்றது, 0-2 என டேவிஸ் கோப்பையில் பின் தங்கியிருந்த போது, சிறப்பாக விளையாடி, அணியை உலக சுற்றுக்கு அழைத்துச் செல்ல உதவியது என, தொடர்ந்து அசத்தி வந்துள்ளார். நேற்றும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் தங்கம் வென்றார். தவிர, நேற்று முன்தினம் தங்களுக்கு எதிரான ஆதரவாளர்கள் முன்பாக, சனம் சிங்குடன் இணைந்து தங்கம் வென்று சாதித்தார்,” என்றார்.

அதிக பதக்கம்
கடந்த 2006 தோகா ஆசிய போட்டி டென்னிசில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளியுடன் மொத்தம் 4 பதக்கங்கள் பெற்றிருந்தது. இம்முறை லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல், இந்திய டென்னிஸ் அணி சீனா சென்றது. இதனால் ஒருசில பதக்கங்கள் பெறுவதே அதிகம் என்ற நிலையில், சோம்தேவ், சனம் சிங், சானியா மிர்சா போன்ற இளம் வீரர்களின் எழுச்சியால் இந்திய அணி 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று அசத்தியது.

Add Comment