எங்கள் திறமைக்கேற்ப விளையாடவில்லை – தோனி

நியூஸீலாந்துக்கு எதிரான இந்த 3 டெஸ்ட் போட்டிகளில் முழுத்திறமையைப் பயன்படுத்தி விளையாடவில்லை என்று இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

நியூஸீலாந்தை இன்று இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தோனி இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் எங்கள் திறமையில் 60% தான் பயன்படுத்தினோம், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 40% திறனை மட்டுமே வெளிப்படுத்தினோம், இதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் நாங்கள் எங்கள் முழுத்திறமையை பயன்படுத்தவில்லை.” என்றார் தோனி

சுரேஷ் ரெய்னா பேட்டிங்கில் தடுமாறுவது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த தோனி, ரெய்னா தொடர்ந்து அதிகப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் அவர் மனோரீதியாக களைப்படைந்திருப்பார், buy Bactrim online என்றார்.

Add Comment