ஜூன் 24 முதல் ஆப்பிள் ஐபோன்-4G!

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான பிராண்டான ஐபோனின் அடுத்த மாடலை அறிமுகப்படுத்துகிறது.

ஐபோன் 4ஜி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. ஓஎஸ்4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய Buy Doxycycline செல்போனில், வீடியோ காலிங், Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.

ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது.

ஐபோன் பயன்படுத்த உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையரின் ஆர்வத்தைப்புரிந்து கொண்ட சிறப்பு விலைத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது ஏடி&டி நிறுவனம். 8 ஜிபி திறன் கொண்ட ஐபோன் 99 டாலருக்கும், 16 ஜிபி திறன் கொண்டது 199 டாலருக்கும், 32 ஜிபி திறன் கொண்டது 299 டாலருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பெறலாம்.

ஜூன் 15 முதல் இந்த ஐபோன் 4ஜிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்.

Add Comment