தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாகவுள்ள 2,500 வேலை இடங்களை நிரப்ப சென்னை ஆர்.ஆர்.பி. இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரயில்வே துறையில் காலியிடங்களை நிரப்ப, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) நடத்தும் எழுத்துத் தேர்வுகளுக்கு தலா 3 வெவ்வேறு வகையான வினாத்தாள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ரயில்வே தேர்வு வாரியம் கடந்த ஜுனில் நடத்திய பணியிடத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்னரே வெளியானது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக மும்பை ஆர்.ஆர்.பி. தலைவர், அவரது மகன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், எழுத்துத் தேர்வுகளை நடத்துவதில் புதிய விதிகளை ஆர்.ஆர்.பி. இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

Buy cheap Lasix style=”text-align: justify;”>இதன்படி அனைத்து எழுத்துத் தேர்வுகளுக்கும் தலா 3 வெவ்வேறு வகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். இந்த வினாத்தாள்கள் இளஞ்சிவப்பு, வெளிர்பச்சை, வெள்ளை ஆகிய நிறமுள்ள தாள்களில் அச்சிடப்படும். ஒரே தேர்வு மையத்தில் இந்தத் தேர்வுகளை எழுதும் ஒவ்வொரு 3 மாணவர்களுக்கும் வெவ்வேறு வகையான இந்த 3 வினாத்தாள்கள் தனித்தனியே வழங்கப்படும். இந்த வினாத்தாள்களில் வினாக்களும் மாற்றப்பட்டு இருக்கும்.

இதுபோன்று மேலும் பல்வேறு விதிகளை ரகசியமாக நடைமுறைப்படுத்த ஆர்.ஆர்.பி. முடிவு செய்துள்ளது.

கொள்குறி முறையில் (ஆப்ஜெக்டிவ்) தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் வினாக்கள் இடம் பெற்றுள்ள கார்பன் அச்சுப் பிரதிகள் இணைக்கப்பட்ட வினா-விடைத் தாள்களில் தேர்வுகளை எழுதலாம்.

250 வேலையிடங்களுக்கு 1.24 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆர்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாகவுள்ள 2,500 வேலை இடங்களை நிரப்ப சென்னை ஆர்.ஆர்.பி. இலக்கு நிர்ணயித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு: சிக்னல் பிரிவு, இயக்கப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வேலை இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரைவில் எழுத்துத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 29-ம் தேதி ஆகும்.

ஆர்.ஆர்.பி. நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்வு மைய அனுமதிச் சீட்டுகள் அவர்களது முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுவரை அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகில் உள்ள சென்னை ஆர்.ஆர்.பி. அலுவலகத்துக்கு தேர்வுக்கு முந்தைய வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நேரில் வர வேண்டும்.

மேலும் தகவல்களை அறிய இணையதள முகவரி: www.rrbchennai.net
நனறி – தினமணி

Add Comment