தென்காசி, கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க.,ரகசிய ஆய்வு கூட்டம்

தென்காசி, கடையநல்லூர் சட்டசபை தொகுதிகளுக்கான திமுக ரகசிய ஆய்வு கூட்டத்தில் இரண்டு தொகுதிகளுக்கும் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்க அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. திமுக தலைமை கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் பொறுப்பாளர்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மற்றும் கடையநல்லூர் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட திமுக நிர்வாகிகளின் ரகசிய ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும், திண்டுக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான செந்தில்குமார் Buy Amoxil முன்னிலையில் ரகசிய ஆய்வு கூட்டம் நடந்தது. முதலாவதாக தென்காசி தொகுதிக்கான நடந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை கழகத்தால் கொண்டுவரப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற திமுக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், பேரூர் திமுக செயலாளரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்வது குறித்தும், வரும் சட்டசபை தேர்தலில் திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதிகளில் தமிழக அரசின் இலவச கலர் “டிவி’, காஸ் அடுப்பு போன்றவை சீராக வழங்கப்படவில்லை எனவும் அதனை உடனடியாக வழங்கிட மாவட்ட நிர்வாகத்திற்கு கட்சியின் தலைமை மூலம் அறிவுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அன்று இரவு கடையநல்லூர் தொகுதிக்கான திமுக நிர்வாகிகள் ரகசிய ஆய்வு கூட்டம் கண்ணுபுள்ளிமெட்டில் நடந்தது. இந்த கூட்டத்திலும் திமுகவினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் சட்டசபை தொகுதியில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டியும், 5 பஞ்.,கள் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட கமிட்டியும் அமைத்திட தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நகர நிர்வாகிகள் கடையநல்லூர் நகர பகுதிகளில் தமிழக அரசு கலர் “டிவி’ இதுவரை வழங்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக வழங்கிடுவதுடன் தொகுதி முழுவதும் விடுபட்ட அனைவருக்கும் இலவச “டிவி’ வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டசபை தொகுதிகளுக்காக நடந்த ரகசிய ஆய்வு கூட்டத்தில் பல்வேறு புகாரினையும் திமுக நிர்வாகிகள் காரசாரமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Add Comment