கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் மரணம்!

கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலக்கடையநல்லூர் பவுண்ட் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரின் மகன் சந்துரு(5) .கடந்த ஐந்து தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று(25.04.2012) திருநெல்வேலி அரசு மருத்துவனையில் மரணமடைந்தான்.

கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுவன் சந்துருவை கடையநல்லூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதியின்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுளான். தென்காசி அரசு மருத்துவ மனையிலும் எந்தவித முனேற்றமும் ஏற்ப்படாததால்  திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளனர்.

தொடர்ந்து இரத்த அணுக்கள் குறையவே சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளான் சிறுவன் சந்துரு.

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சல் சிக்கன் குனியாவா, டெங்குவா அல்லது எந்தவகையிலான காய்ச்சல் என்ற மர்மத்திற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. நகராட்சி பகுதியில் கடுமையாக காணப்படும் சுகாதார கேடு தான் காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம் எனவும், அதிகளவில் காணப்படும் கொசுக்கள்தான் காய்ச்சலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் புனரமைப்பு திட்டத்திற்காக பதிக்கப்படும் குழாய்களுக்காக தோண்டப்படும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது நகராட்சி குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, சாக்கடைகள் சங்கமித்து வருவதாகவும், இதனால் காய்ச்சல் பரவுவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மேலக்கடையநல்லூரில் சில தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை கலந்து வரும் குடிநீரை நகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்து சென்றதாகவும் Buy Ampicillin Online No Prescription தெரிகிறது. இதனிடையில் கடந்த சுமார் 10 தினங்களாக காணப்பட்ட மர்மக்காய்ச்சலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகராட்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வரும் சிலர் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவு காரணமாக திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரிகளில் கூட்டம்

இதனிடையில் கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்து உள் நோயாளிகளாக சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தகவல்:பஷீர் அஹமது,நாராயணன்

Add Comment