கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை இறந்தது

கடையநல்லூரில் பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
கடையநல்லூர் நகராட்சி பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியிலும் buy Levitra online கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது.

வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்த சர்வே பணிகள் பெருமளவில் எடுக்கப்பட்டுவிட்டன. கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 11 பேரின் ரத்தம் ஒசூர் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மர்மக் காய்ச்சல் பாதித்து ரஹீமா மரணமடைந்தார் இந்நிலையில் நேற்று முன்தினம் 5 வயது சிறுவன் சந்துரு மரணமடைந்தான்.

இந்நிலையில் கடையநல்லூர் இக்பால்நகர் நடுத்தெருவை சேர்ந்த துராப்ஷா என்பவரின் 10 மாத குழந்தை தஸ்லீம் மர்மக் காய்ச்சலுக்கு இறந்தது. காய்ச்சல் பாதித்த 10 மாத குழந்தை தஸ்லீம் சிகிச்சைக்காக கடையநல்லூர் தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி கொண்டு சென்ற நிலையில் இறந்துபோனதாக கூறப்படுகிறது. 10 மாத குழந்தையின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைந்துவிட்டதின் காரணமாக குழந்தை இறந்து போனதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் கடையநல்லூர் பகுதியில் நேற்று பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மர்மக் காய்ச்சல் பாதித்து கடையநல்லூரில் இதுவரை 3 பேர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ASAN

Add Comment