யு.ஏ.இ எடிசலாத்தின் சி.இ.ஒ உலக சி.இ.ஒ-2010 ஆக தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்மை தொலைத்தொடர்பு தருவிப்பாளரான எடிசலாத்தின் சி.இ.ஒ முஹம்மது ஒம்ரான் 2010 ஆம் ஆண்டிற்கான உலகிலேயே சிறந்த சி.இ.ஒ(Chief Executive Officer) ஆக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சியொன்றில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொலைத்தொடர்புத் online pharmacy no prescription துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காகத்தான் இவ்விருந்து ஒம்ரானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எடிசலாத்தின் சந்தை மதிப்பு 30.8.பில்லியன் திர்ஹம் ஆகும். இந்நிறுவனத்திற்கு உலகமுழுவதும் 100 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக எடிசலாத்தின் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர் ஒம்ரான். கடந்த 2005 ஆம் ஆண்டு எடிசலாத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தொலைத்தொடர்புத் துறையில் ஒம்ரானின் தனிப்பட்ட சாதனைகள், புதுமைகளை புகுத்தியது உள்ளிட்டவை இவ்விருதுக்காக கவனத்தில் கொள்ளப்பட்டன.

Add Comment