விக்கிலீக்ஸ்:இந்தியாவுக்கு அமெரிக்கா முன்னறிவிப்பு

:ஈராக் போர் தொடர்பான அமெரிக்காவின் லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளம் அடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறைத் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இதில் பத்துலட்சம் தூதரக உறவுத் தொடர்பான ஆவணங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை வெளியானால், அமெரிக்காவின் நட்பு நாடுகளை சிக்கலில் ஆழ்த்தும் எனக் கருதுவதால், இந்தியாவுக்கு அமெரிக்கா இதுக் குறித்து முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.

விக்கிலீக்ஸின் அடுத்த நடவடிக்கையைக் குறித்து தெரியாது எனவும், ஆனால், Buy cheap Doxycycline ஆவணங்களை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜூலியன் அஸன்ஜா என்பவர்தான் விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஆவார்.

Add Comment