மோடி குஜராத்தின் மாவோ-ராகுல் காந்தி

குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் நரேந்திர மோடி குஜராத்தின் மாவோ என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Buy Doxycycline Online No Prescription style=”text-align: justify;”>குஜராத்தில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மாநிலத்தின் வளர்ச்சித் தொடர்பாக கூறுகையில் மோடியை சீனாவின் மாவோவுடன் ஒப்பீடுச் செய்தார்.

சீனாவில் மாவோவும் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், அவர் அந்த நாட்டில் கடுமையான நாச வேலைகளிலும் ஈடுபட்டார். குஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவதற்காக மோடிக்கு தேவையான பாராட்டுக்களை நான் மறுக்கவில்லையென்றாலும், அவர் தேசத்திற்கு சில பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளார் என ராகுல் காந்தி 2002 குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

Add Comment