தொன்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: போரின் விளிம்பிற்கு கொண்டுசெல்லும் என வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டு கடற்படை ராணுவ பயிற்சி இப்பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை துவங்கவிருக்கும் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் வாஷிங்டன் உள்ளிட்ட கப்பல்கள் கொரிய கடற்பகுதியை நோக்கி விரைந்துக் கொண்டிருக்கின்றன.

வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையே நேற்று முன்தினம் நடந்த பீரங்கித் தாக்குதல் இப்பிராந்தியத்தில் போர்சூழலை உருவாக்கியது. இத்தாக்குதலில் இரண்டு ராணுவத்தினரும், இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே ராஜினாமாச் செய்த தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங்குக்கு பதிலாக முன்னாள் கூட்டுப்படை கட்டளைப் பிரிவு பிரதிநிதி தலைமை அதிகாரியாக பணியாற்றிய லீஹீவோன் புதிய பாதுகாப்பு Bactrim No Prescription அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

யோன்பியோங் தீவில் வடகொரியா நடத்திய தாக்குதலுக்கு உடனடியாக பதிலடிக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங் ராஜினாமாச் செய்திருந்தார்.

வடகொரியாவுக்கெதிரான போர் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ள முட்டாள்தனமான முடிவு பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்வதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கெ.சி.என்.எ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் யோன்பியோங் தீவில் நேற்றும் பீரங்கி சப்தம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைக் குறித்து விசாரித்து வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் எல்லைக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பின் சப்தமாக இது இருக்கலாம் என பி.பி.சி கூறுகிறது. தென்கொரியாவின் போர் பிரியர்கள் கோபத்தை தூண்டினால் இனிமேலும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add Comment