கடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்?


கடையநல்லூரில் மக்தூம் ஞானியார் ஜும்மா பள்ளிவாசல் கடந்த ஏப்ரல் மாதம்  மக்தூம் ஞானியார் தர்கா அருகில் புதிதாக துவக்கப்பட்டது.

இந்த பள்ளிவாசல் துவங்கப்பட்டது முதல் ஐந்து வேளை தொழுகைக்கும்  அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பது அனைவரின் கருத்தாகும்.

அதேசமயம்,வருடா வருடம் நோன்பு பெருநாள்,ஹஜ் பெருநாள் தொழுகை  காயிதே  மில்லத்  திடலில் நடைபெறுவது வழக்கம்.இந்த பெருநாள் தொழுகையை யார் நடத்துவது என்று கடையநல்லூரில் உள்ள இயக்கங்களுக்கு மத்தியில் போட்டி நடை பெறுவதும் பின்பு கோர்ட் வரை சென்று முடிவு அறிவிப்பதும் ஒவ்வொரு வருடமும் நடை பெற்று வருகிறது.

இந்த  திடல் தொழுகை நடைபெறுவதை கடையநல்லூரில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக தொழுகை நடக்க வேண்டும் என்பதே online pharmacy without prescription கடையநல்லூர் வாசிகள் அனைவரின் விருப்பமாகும்.

இந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக புதிதாக காயிதே மில்லத் திடலில் ஒரு பள்ளிவாசல் உதயமானது பிளவு  பட்டு போலிஸ் ,கோர்ட் என்று செல்லும் நமதூர்  இயக்கங்களுக்கு மத்தியில் புதிய மாற்றத்தை உருவாக்கி உள்ளது என்கின்றனர் இந்த பகுதி மக்கள்.

மாற்றம் ஏற்படுமா?திடல் தொழுகையில் ஒற்றுமை உருவாகுமா?பொறுத்திருந்து பார்ப்போம்…

 

Comments

comments

Add Comment