ஸ்டிராஸ், குக் அபார சதம்: * மீண்டது இங்கிலாந்து

பிரிஸ்பேன் டெஸ்டில் ஸ்டிராஸ், குக் அபார சதம் அடிக்க, இங்கிலாந்து அணி நெருக்கடியில் இருந்து மீண்டது. ஆஸ்திரேலியா பவுலர்கள் சொதப்ப, போட்டி “டிரா’வை நோக்கி செல்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள Ampicillin No Prescription இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 260, ஆஸ்திரேலியா 481 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.
ஸ்டிராஸ் சதம்:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்தின் ஸ்டிராஸ், குக் இருவரும் தங்களது நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர். வாட்சன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ஸ்டிராஸ், சிடில் பவுலிங்கிலும் இரண்டு பவுண்டரி விளாசினார். 69 ரன்கள் எடுத்த நிலையில் தப்பிப்பிழைத்த இவர், சர்வதேச அரங்கில் 19வது சதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க பாண்டிங் எடுத்த முயற்சி பலிக்கவில்லை.
குக் அபாரம்:
முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டிராஸ் (110), நார்த்திடம் வீழ்ந்தார். பின் குக்குடன் டிராட் இணைந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக், 14வது சதம் கடந்து அசத்தினார். மறு முனையில் இவருக்கு நல்ல “கம்பெனி’ கொடுத்த டிராட், ஐந்தாவது அரைசதம் அடித்தார்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், ஒரு விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்து, 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. குக் (132), டிராட் (54) இருவரும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
நான்காவது நாளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், தோல்வியின் பிடியில் இருந்து இங்கிலாந்து மீண்டுள்ளது. இன்று போட்டியின் கடைசி நாள். இங்கிலாந்து அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், ஆட்டம் டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.

Add Comment