நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம் பகுதியில் கடந்த 2 வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் தென்காசி வடகரையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் என 7 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகினர். அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தென்காசி வடகரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பண்டாரம் மகனும் 10-ம்வகுப்பு மாணவருமான வனராஜ் (வயது 16) மற்றும் கடையம் முதலியார்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நிஜாம் மகன் பக்கீர் முகைதீன்(4) ஆகிய 2 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால் நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இது நெல்லை மாவட்ட பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலியார்பட்டியை சேர்ந்த அப்துல் நவாப்கான் மகள் பீர் பாத்திமா (10), அப்துல் கபூர் மகன் யாசர்அராபத் (13) , காந்திநகரை சேர்ந்த முருகன் மகளும் ஆசிரியை பயிற்சி பள்ளி மாணவியுமான மாரி (18), பானு மகள் நபிஷா பேகம் (18) ஆகிய 4 பேரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தென்காசி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையம் பகுதியில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க Levitra online சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து நேற்று கடையம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் பழனிகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தார்.
சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஹரிசங்கர், குயின்ஷிபா, எபனேசர் மற்றும் செவிலியர்கள் கடையம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர்.
மர்ம காய்ச்சல் குறித்து வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உசேன் கூறியதாவது:-
கடையநல்லூர் பகுதியில் பரவிய இந்த வகை காய்ச்சல், தற்போது வடகரையிலும் பரவி வருகிறது. கடையநல்லூரில் காய்ச்சலுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. வடகரை பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுமார் 50 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எக்காரணம் கொண்டும் அலட்சியம் கூடாது. 4 நாட்களுக்கு மேலாகியும் காய்ச்சல் குறையவில்லை என்று தெரியவந்தால் அந்த நோயாளிகளை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புகிறோம்.
கொசுக்கள் மூலம் காய்ச்சல் பரவுகிறது.எனவே வீட்டின் அருகே கழிவுநீர் தேங்க விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். இதை முழுமையான டெங்கு காய்ச்சல் என்று கூறிவிட முடியாது.இவ்வாறு டாக்டர் உசேன் கூறினார்.
-malaimalar

Add Comment