மீண்டும் தப்பியது கொச்சி அணி

ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் இருந்து கொச்சி அணி மீண்டும் தப்பியது. இது தொடர்பாக வரும் டிச. 5ம் தேதி பி.சி.சி.ஐ., இறுதி முடிவு எடுக்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் மூன்று முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதில், புனே, கொச்சி அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன.
பங்கு பிரச்னை:
சுமார் 1, 533 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கொச்சி அணியின் உரிமையாளர்கள் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதில், முதலீடு செய்துள்ள ஆன்கர் எர்த், பரினி டெவலப்பர்ஸ், ரோசி புளூ மற்றும் பில்ம் வேவ் ஆகிய நிறுவனங்கள் 74 சதவீத பங்குகளை வைத்துள்ளன. மீதமுள்ள 26 சதவீத பங்குகள் ஐ.பி.எல்., உரிமையை பெற உதவிய,”ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு’ நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இந்த 26 சதவீத பங்குகள் தான் பிரச்னைக்கு காரணமாக இருந்தது. சமரச தீர்வு:
பின் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், 15 சதவீத பங்குகளை விட்டுக் கொடுக்க “ரெண்டஸ்வஸ்’ நிறுவனம் முன் வர, சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து விலகும் எண்ணத்தை முதலீட்டாளர்கள் கைவிட்டனர். உரிமையாளர்கள் பற்றிய விபரத்தை பி.சி.சி.ஐ.,க்கு முறைப்படி அனுப்பி வைத்தனர்.
இது பற்றி நாக்பூரில் நடந்த ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், கொச்சி அணி தொடர்பாக வரும் டிச. 5ம் தேதி இறுதி முடிவு எடுப்பது என முடிவு செய்தனர். ஏற்கனவே, ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக கூறி ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நீக்கப்பட்டன. அப்போது தப்பிய கொச்சி அணி தனது பிரச்னைக்கு தீர்வு காண 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் இருந்து தப்பியுள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,”” கொச்சி அணியினர் 30 நாட்கள் கெடு முடிவதற்கு முன்பாக, தங்களது உரிமையாளர்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளனர். இதனை எங்களது சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்ய Buy Amoxil Online No Prescription உள்ளனர். இவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில், கொச்சி அணி குறித்து வரும் டிச.5ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார்.

Add Comment