கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி

கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இளம் இந்திய அணி சாதித்து காட்டியது. விராத் கோஹ்லி சதம் விளாச, நியூசிலாந்த அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது. இந்திய அணியில் தோனி, சச்சின், சேவக் உள்ளிட்ட “சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட, முதன் முதலாக அணியின் கேப்டன் பொறுப்பை காம்பிர் ஏற்றார்.
வெட்டோரி, காயம் காரணமாக பங்கேற்காததால், “டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் ரோஸ் டெய்லர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா இடம் பெற்றார்.
சுமாரான துவக்கம்:
இந்திய அணிக்கு காம்பிர், முரளி விஜய் இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். முதலில் சற்று “அடக்கி’ வாசித்தனர். பின் பவுண்டரிகளாக விளாசிய முரளி விஜய் (29) அதிக நேரம் நீடிக்கவில்லை.
யுவராஜ் ஆறுதல்:
பின் காம்பிருடன் இணைந்த விராத் கோஹ்லி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். காம்பிர் 38 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த யுவராஜ், மந்தமாக துவங்கி பின் அதிரடிக்கு மாறினார். நாதன் மெக்கலத்தை யுவராஜ் சிங் ஒருகை பார்த்தார். இவரது அடுத்தடுத்த ஓவர்களில், ஐந்து பவுண்டரிகள் விரட்டிய, யுவராஜ் சிங் 42 ரன்களுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கோஹ்லி சதம்:
சுரேஷ் ரெய்னா (13) மீண்டும் ஏமாற்றினார். மறுமுனையில் அசத்தலான ஆட்டத்தை தொடர்ந்தார் கோஹ்லி. நாதன் மெக்கலத்தின் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து கலக்கினார். பின் மில்ஸ் பந்தில் பவுண்டரி அடித்து, தனது நான்காவது சர்வதேச சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சதம் அடித்த கோஹ்லிக்கு, இது தொடர்ந்து இரண்டாவது சதம்.
விக்கெட் மடமட:
மெக்கே ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்து சற்று ஆறுதல் அளித்த யூசுப் பதான், 29 ரன்களில் திரும்பினார். பின்வரிசை வீரர்கள் ஏனோ, தானோ என வருவதும் போவதுமாக இருந்தனர். சகா (4), அஷ்வின் (0) இருவரும் மெக்கேயின் ஒரே ஓவரில் வீழ்ந்தனர். ஸ்ரீசாந்த் (4), ஆஷிஸ் நெஹ்ரா(0) ஏமாற்றினர். இந்திய அணி 49 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பவுலிங்கில் அசத்திய மெக்கே 4, மில்ஸ் 3, டபி 2 விக்கெட் கைப்பற்றினர்.
டெய்லர் ஆறுதல்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றமான துவக்கமே கிடைத்தது. ஹவ் (9), கப்டில் (36) நீடிக்கவில்லை. இளம் வில்லியம்சன் 25 ரன்களுக்கு அவுட்டானார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஸ் டெய்லர், அதிகபட்சமாக அரைசதம் (66) கடந்து வெளியேறினார்.
கடைசி பரபரப்பு:
பின் வந்த அனுபவ ஸ்டைரிஸ் (10), எலியட் (5), டபி (4) மற்றும் ஹாப்கின்ஸ் (16) அடுத்தடுத்து வெளியேறினர். நியூசிலாந்து அணி 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து இணைந்த நாதன் மெக்கலம், மில்ஸ் இருவரும் இணைந்து, போராட, இந்திய வெற்றி கைவிட்டு போய்விடுமோ என “டென்ஷன்’ ஏற்பட்டது.
இந்நிலையில் வேகத்தில் மிரட்டிய ஸ்ரீசாந்த், நாதன் மெக்கலம் (35), மில்ஸ் (32) இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி, இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் பெற்றது.
ஸ்ரீசாந்த், அஷ்வின், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.

ரசிகர்கள் குறைவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் “சீனியர்கள்’ சச்சின், தோனி, சேவக் உள்ளிட்ட பல வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. இதுகுறித்து அசாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறுகையில்,”” இம்முறை நட்சத்திர வீரர்கள் இல்லாத காரணத்தால், ரசிகர்கள் வருகை மிகவும் இருந்தது உண்மை தான். மாணவர்களுக்கு சலுகை விலையில் டிக்கெட் கொடுத்தும் கூட, அதிக வரவேற்பு இல்லை,” என்றார்.

காம்பிர் திருப்தி
முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் காம்பிர் கூறுகையில்,”” டாசில் தோற்றதும், பேட்டிங்கில் யாராவது ஒருவர் சதம் அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். விராத் கோஹ்லி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தது. பின் பவுலர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். அஷ்வின், ஸ்ரீசாந்த், நெஹ்ரா ஆகியோருடன் யுவராஜ் சிங்கும் நன்கு அசத்தினார். மொத்தத்தில் அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. இது மீதமுள்ள போட்டிகளிலும் தொடரும் என்று நம்புகிறேன்.

ஸ்கோர் போர்டு
இந்தியா
முரளி விஜய்(கே)ஹாப்கின்ஸ்(ப)டபி 29(32)
காம்பிர்(கே)ஹவ்(ப)மெக்கே 38(38)
கோஹ்லி(கே)ஹவ்(ப)மெக்கே 105(104)
யுவராஜ்(கே)ஹாப்கின்ஸ்(ப)டபி 42(64)
ரெய்னா(கே)ஹவ்(ப)மில்ஸ் 13(18)
யூசுப்(கே)டெய்லர்(ப)மில்ஸ் 29(19)
சகா(கே)ஹாப்கின்ஸ்(ப)மெக்கே 4(5)
அஷ்வின்(கே)+(ப)மெக்கே 0(2)
நெஹ்ரா-ரன் அவுட்(டெய்லர்) 0(6)
ஸ்ரீசாந்த்(கே)ஹவ்(ப)மில்ஸ் 4(6)
முனாப்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 11
மொத்தம் (49 ஓவரில், ஆல் அவுட்) 276
விக்கெட் வீழ்ச்சி: 1-44(முரளி விஜய்), 2-92(காம்பிர்), 3-180(யுவராஜ்), 4-220(ரெய்னா), 5-250(கோஹ்லி), 6-256(சகா), 7-256(அஷ்வின்), 8-257(நெஹ்ரா), 9-275(யூசுப்), 10-276(ஸ்ரீசாந்த்).
பந்து வீச்சு: மில்ஸ் 10-0-42-3, டபி 8-0-56-2, மெக்கே 10-1-62-4, எலியாட் 5-0-24-0, நாதன் மெக்கலம் 9-0-53-0, ஸ்டைரிஸ் 6-0-26-0, வில்லியம்சன் 1-0-11-0.
நியூசிலாந்து
கப்டில்(கே)முனாப்(ப)அஷ்வின் 30(37)
ஹவ்(கே)முரளி விஜய்(ப)நெஹ்ரா 9(15)
வில்லியம்சன்(கே)சகா(ப)யுவராஜ் 25(51)
டெய்லர்(கே)முனாப்(ப)அஷ்வின் 66(69)
ஸ்டைரிஸ்(கே)யூசுப்(ப)யுவராஜ் 10(12)
எலியட்(கே)யூசுப்(ப)ஸ்ரீசாந்த் 5(6)
டபி(கே)ரெய்னா(ப)யுவராஜ் 4(5)
ஹாப்கின்ஸ்(கே)யூசுப்(ப)அஷ்வின் 16(14)
மெக்கலம்(கே)காம்பிர்(ப)ஸ்ரீசாந்த் 35(35)
மில்ஸ்(கே)சகா(ப)ஸ்ரீசாந்த் 32(28)
மெக்கே-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 4
மொத்தம் (45.2 ஓவரில் ஆல் அவுட்) 236
விக்கெட் வீழ்ச்சி: 1-32(ஹவ்), Buy cheap Cialis 2-46(கப்டில்), 3-113(வில்லியம்சன்), 4-131(ஸ்டைரிஸ்), 5-136(எலியட்), 6-144(டபி), 7-157(டெய்லர்), 8-169(ஹாப்கின்ஸ்), 9-236(நாதன் மெக்கலம்), 10-236(மில்ஸ்).
பந்து வீச்சு: நெஹ்ரா 9-0-44-1, ஸ்ரீசாந்த் 5.2-0-30-3, அஷ்வின் 10-1-50-3, முனாப் படேல் 8-0-39-0, யுவராஜ் சிங் 10-0-43-3, யூசுப் பதான் 2-0-24-0, ரெய்னா 1-0-5-0.

Add Comment