இரவில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் மறுப்பு

தென்காசியில் இரவு நேரங்களில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சையளிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. தென்காசியில் ஏராளமான தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இங்கு திடீரென இரவில் நெஞ்சுவலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் வருகின்றனர். இரவு 11 மணிக்கு மேல் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் முன்வருவதில்லை. இதனால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் அங்கும், இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

சில நேரங்களில் விலை மதிப்பற்ற உயிருக்கே ஆபத்தான சூழல் ஏற்பட்டு விடுகிறது. டாக்டர்கள் பகல் முழுவதும் நோயாளிகளை கவனித்து சோர்வாக இரவில் தூங்குவதால் அவர்களால் எழுந்துவர முடிவதில்லை. ஆனால் சிகிச்சை பெற்றுவிடலாம் என நம்பி வரும் நோயாளிகளை ஏமாற்றக்கூடாது. எனவே இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க கூடுதலாக Buy Ampicillin டாக்டர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்டபோது : “”மிகவும் அபாயகரமான சூழலில் வரும் நோயாளிகளுக்கு இரவு எந்நேரத்திலும் நாங்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதில்லை. ஆனால் சிறிய பாதிப்பிற்கும் உறவினர்கள் தேவையில்லாமல் பதட்டப்பட்டு எங்களை தொந்தரவு செய்து விடுகின்றனர். எனினும் இரவு நேரங்களில் நன்கு பயிற்சி பெற்ற நர்சுகள் பணியில் இருக்கின்றனர்” என்றனர். இருப்பினும் தென்காசியில் மட்டுமல்ல பல சிறிய ஊர்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வருவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. உயிரின் மதிப்பை நன்கு உணர்ந்த டாக்டர்கள் தன்னலம் கருதாது எந்நேரமும் பணியாற்ற முன்வர வேண்டும்.

Add Comment