குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த காற்று தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் குற்றாலம் பொதிகை மலையிலும் தொடர்மழை பெய்து வருவதால் மெயின்அருவி, புலியருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், சிற்றருவி போன்ற அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு Buy Viagra Online No Prescription ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவியில் நேற்று காலை சுமார் 11.30 மணியிலிருந்து இரவு வரை அதிகளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவியில் ஆக்ரோஷமாக விழும் தண்ணீரை மட்டும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.ஐந்தருவியில் அனைத்து அருவிகளும் ஒன்று சேர்ந்து பெரிய அருவி போல் காட்சியளிக்கும் விதமாக தண்ணீர் விழுந்தது. பின்னர் சற்று குறைந்ததால் ஒருசில சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். மெயின் அருவியில் குளிக்க முடியாத சுற்றுலா பயணிகள் புலியருவி, சிற்றருவி, பழையகுற்றாலம் போன்ற அருவிகளுக்கு படையெடுத்தனர்.

Add Comment