பிஎஸ்என்எல் 3ஜி டேட்டா கார்டிற்கு சலுகை

பிஎஸ்என்எல்., Buy Levitra 3ஜி டேட்டா கார்டு சலுகை விலையில் வழங்கப்படுவதாக நெல்லை பிஎஸ்என்எல்., பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; புதிய 3ஜி வாகடிக்கையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு அன்லிமிடெட் டவுண்லோடு வழங்கப்படுகிறது. 2ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 3ஜி டேட்டா கார்டு 2 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் 3ஜி டேட்டா கார்டு வாடிக்கையாளர்கள் 2ஆயிரம் ரூபாய்க்கு டேட்டா ரீசார்ஜ் செய்தால் 60 நாட்களுக்கும், 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு டேட்டா ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கும், 4ஆயிரத்து 200 ரூபாய்க்கு டேட்டா ரீசார்ஜ் செய்தால் 180 நாட்களுக்கும் 3ஜி அன்லிமிடெட் டவுண்லோடு வழங்கப்படுகிறது.

இதுதவிர முன்பணம் 9 ஆயிரத்து 861 ரூபாயை மொத்தமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 19 மாதத்திற்கு 2ஜிபி டேட்டா டவுண்லோடு மற்றும் 2 ஆயிரத்து ரூபாய் மதிப்புள்ள டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய 3ஜி டேட்டா கார்டு இணைப்பு பெற விரும்புவோர் 0462-2500057 என்ற டெலிபோன் எண்ணில் தொடர்பு கொண்டால் வீடு தேடி வந்து இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு நெல்லை பிஎஸ்என்எல்., பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Add Comment