கடையநல்லூர் பகுதியில் மணல் கடத்தல்:10 மாட்டு வண்டிகள் பறிமுதல்

கடையநல்லூர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 மாட்டு வண்டிகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கால்வாய் மற்றும் ஆற்றுப்படுகைகளிலும், விவசாய நிலப்பரப்பு அருகாமையிலும் நீர்பிடிப்பினை பாதிக்கும் வகையில் அதிகமான அளவில் மணல் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு Amoxil No Prescription பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பெரியாற்று படுகையிலும் தற்போது பெய்த மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட மணலை மாட்டு வண்டிகளில் கடந்த இரண்டு தினங்களாக அதிகளவில் கடத்தி வந்தனர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, தென்காசி ஆர்டிஓ சேதுராமன் ஆலோசனையின்படி தாசில்தார் விஜயா, வருவாய் ஆய்வாளர் ஆதிநாராயணன், விஏஓ.,க்கள் கல்யாணசுந்தரம், ஆறுமுகசாமி ஆகியோர் கடையநல்லூர், சொக்கம்பட்டி போன்ற பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது கடையநல்லூர், சொக்கம்பட்டி பகுதிகளில் 10 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Add Comment