ஊழலில் மிதக்கிறது இந்தியா

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக மத்திய அரசின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் குற்றம்சாற்றப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டிலிருந்து, இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) வீட்டுக் கடனுக்கு இலஞ்சம் என்ற ஊழல் வரை நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது ஊழல் வெள்ளம்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவரத் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டு ஊழலும், தலைமை தணிக்கையாளர் அறிக்கையின் வாயிலாகவே வெளியானது. காமன்வெல்த் போட்டிகளுக்காகக் கருவிகளை வாங்கியதிலும், கட்டங்களும், இதர கட்டமைப்புகளும் ஏற்படுத்தியதிலும் நடந்த ஊழல்கள் அந்த அறிக்கையின் வாயிலாகவே நாட்டு மக்களுக்குத் தெரியவந்தது. ஒரு குளிர்பதனப் பெட்டியின் (Refrigerator) விலையை விட கூடுதலாக தொகைக்கு அது வாடைக்கு எடுக்கப்பட்டிருந்த அதிசயம் வெளிவந்தது.

காமன்வெல்த் போட்டிகளுக்காக, விளையாட்டு ஏற்பாடுகளுக்கு மட்டுமல்ல, உள்கட்டுமான வசதிகளையும் மேம்படுத்த செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ.71,000 கோடி! அதில் எந்த அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து ஒரு தெளிவான விவரம் இதுவரை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. buy Viagra online விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டு ஊழலால் நிலைகுலைந்த நாட்டின் பெருமையை, நமது விளையாட்டு வீரர்கள் முதன் முதலாக 101 பதக்கங்களை வென்று தூக்கி நிறுத்தினர்.

கார்கில் போரில் எல்லையைக் காக்க தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்திய இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்புகளை, தியாகத்தோடு சம்மந்தம் இல்லாதவர்கள் பலருக்கு ஒதுக்கப்பட்ட ஊழல், மராட்டிய அரசியலை புரட்டி போட்டது. முதல்வராக இருந்த அசோக் சவாண் பதவி இழந்ததோடு அந்த ஊழல் நின்றுவிடவில்லை, 31 அடுக்குகளைக் கொண்ட ஆதர்ஷ் குடியிருப்புக் கட்டடம் இடித்துத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (Coastal Regulation Zone II) பகுதி இரண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதலைப் பெறாமல் கட்டப்பட்டுள்ளது என்றும், அது பல விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதால் டிச.3ஆம் தேதிக்குப் பிறகு இடித்துத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எத்தனை நூறுக் கோடி ரூபாய் இழப்பு? இத்தனை நாள் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு இது தெரியாதா?

“இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரை நடந்த ஊழல்கள் அனைத்தையும் வெட்கப்பட வைத்த ஊழல்” என்று இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலை வர்ணித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.இராசா, தனது புத்தி சாதுரியத்தை பயன்படுத்தி, தொலைத் தொடர்பு கொள்கைகளைக் காட்டி, செல்பேசி சேவை நடத்த அளித்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ரூ.1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பை மட்டுமல்ல, நாட்டிற்கு மான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001ஆம் ஆண்டின் கொள்கை முடிவுகளை மாற்றாமல், அதனையே வசதியாகப் பயன்படுத்தி பல பெரும் நிறுவனங்கள் மறைமுகமாக பயன்பெரும் வகையில் செய்யப்பட்ட முறைகேடான அந்த ஒதுக்கீட்டால் பயன் பெற்ற நிறுவனங்கள் எவை? எந்த அளவிற்கு என்பது தெரியவரும்போது, நமக்கெல்லாம் தலை சுற்றப் போகிறது.

இந்த பெரும் ஊழலிற்காகவே மத்திய தொலைத் தொடர்புத் துறையின் பொறுப்பில் ஆ.இராசாவை அமர்த்த பெரும் முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பதையே, அரசிற்கும், பெரு நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே தொடர்பாளராக செயல்பட்ட நீரா ராடியாவின் உரையாடல் காட்டுகிறது. இந்த நாட்டில் யார், எந்த அமைச்சகப் பொறுப்பில் அமர வைக்கப்பட வேண்டும் என்பதை இந்நாட்டின் பெரு நிறுவனங்களே, அவைகளின் லாபியே முடிவு செய்கிறது என்பதை இராசா நியமனம் நன்றாகவே காட்டியுள்ளது.

Add Comment