உன் கனைப்புக்குரல்

தள்ளாடும் buy Doxycycline online தனிமையில்
திண்டாடும் இளமை;
கூட்டமாய் இருந்தாலும்
முகம் வாட்டமாய் இருக்கும்
விழித் தேட்டமாய் இருக்கும்!

கண்சிமிட்டும் மின்மினிப் போல்
கட்டிடங்கள் இங்கே;
இருளையும் விரட்டிச் செல்லும்
மின்விளக்குகள் அங்கே!

வனவாசம் போல
பண வாசம் கொண்டு;
பாசங்களைக் கொன்று;
நினைவுகளை மட்டும் மென்று!

திசைத்தேடும் மனமும்
பசைப்போட்டு நிற்கும்;
அசைப்போடும் அனுபவங்கள்
விசையாக இருக்கும்
விசிறிப்போல சுற்றும்!

வறண்டச் சிரிப்புகள்
உதட்டைப் பிளக்கும்;
மிரளும் கடமைகள்
உறக்கத்தைக் கெடுக்கும்!

வெளியில் செல்லவே
வெட்கமாய் இருக்கும்;
பிறரைக் குடும்பத்தோடுக் கண்டால்
பொறாமை இறுக்கும்!

காதோடு உன் கனைப்புக்குரல்
கைப்பேசியில் ஒலிக்கும்;
பொத்திவச்சக் என் கவலைகள்
போர்த்திக் கொண்டு ஒளியும்!

-யாசர் அரஃபாத்

Add Comment