கடையநல்லூரில் TNTJ நடத்திய சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 03.05.2012 வியாழன் மஃரிபிற்குப் பிறகு நகராட்சி பூங்கா அருகில் சுகாதார விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை தலைவர் சகோ.K.M.அய்யூப் கான் அவர்கள் தலைமை வகித்தார். கடையநல்லூரில் Buy cheap Lasix நிலவி வரும் மர்மக் காய்ச்சலை ஒழிப்பதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதில் பொதுமக்களின் பங்கும் அவசியம் என்ற அடிப்படையில் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ‘இஸ்லாமும் சுகாதரமும் என்ற தலைப்பில் மவ்லவி.முஹம்ம்து ஒலிMISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அவர் தனது உரையில் ” பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகை பிடிப்பதை பற்றியும், சுகாதாரத்திற்கு இடையூறு ஏறபடுத்தும் வகையில் மக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் மல,ஜலம் கழிப்பது குறித்தும்,தெருக்களில் மலைபோல் குப்பைகளை கொட்டிவைப்பது குறித்து, இன்னும் தனிமனிதன் பேண வேண்டிய சுகாதார முறைகள் குறித்தும் இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை தெளிவாக விளக்கினார்.அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டனர்.

Add Comment