ஏழைகளின் சொத்தான கீரையின் மருத்துவ குணங்கள்!

ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரைவிலை மலிவான சாதாரண பொருட்களிலும் நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின் பலன்கள் பின்வருமாறு:

அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரைவகைகளில் இது முதன்மையானது. எல்லாநோயாளிகளும் உண்ணக்கூடியது. கண் பார்வைச்சிறப்பாக வைத்திருபதற்கு இந்தக்கீரை பயன்படுகிறது. இரத்தநாளங்கள் ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமானமகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.

மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண் வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்ட சஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள். மூலநோய்இ குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்கு அற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.

பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில் வல்லது. ஆண்மையைப்பலப்படுத்தும் குளிர்ச் சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்கீரையைக்கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

வெந்தியக்கீரை: இதில் புரதம்இ தாதுக்கள் மற்றும் விட்டமின் சி முதலியன் அபரிதமாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும் கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம் ஒருமுறை இக்கீரையை உண்டுவர மூட்டுவலிஇஇடுப்புவலி போன்றவை நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.

Lasix No Prescription justify”>முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும்தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்கு பசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின் போதுவரும் காச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது.

அகத்திக்கீரை: இதில் வைட்டமின்இ இரும்புச்சத்து சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்டநரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால்வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர்உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும் உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மையடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

புளியாரைக்கீரை: காயகல்பத்திற்கு இணையானதுஎன வள்ளலாரால் பேசப்பட்டது. கபம்இ பித்தவாயுவைகண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூலநோய்க்கும் நாட்பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.

Add Comment