கடையநல்லூரை ஆக்கிரத்துள்ள மர்ம காய்ச்சலை விரட்டியடிப்போம்!

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையில் கடந்த சில வாரங்களாக காணப்பட்ட மர்மக்காய்ச்சலின் தாக்கமும் buy Doxycycline online உயிர் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இன்றுவரை கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலின் தாக்கம் கடையநல்லூர் மக்களை விட்டு அகலாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த மர்ம காய்ச்சலுக்கு காயிதே மில்லத் தெருவை சேர்ந்த ரஹீமா , இக்பால் நகர் நடுத்தெருவை சேர்ந்த துராப்ஷாவின் மகள் 10 மாத பெண் குழந்தை தஸ்லீம் ,மேலக்கடையநல்லூரை சேர்ந்த 5 வயது சிறுவன் சந்துரு, 10 மாத குழந்தை கார்த்திகேயன் மற்றும் பக்கீர் மூகைதீன், வனராஜ் ஆகிய 6 பேர் மரணமடைந்தனர். இந்த மர்மக் காய்ச்சலின் தாக்கம் ஏழை, பணக்காரர்,நல்லவர், கெட்டவர், என்ற பகுபாடில்லாமலும்,எந்த ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

இது டெங்கு காய்ச்சல்தான் என சுகாதார துறையினர் கூறி கடையநல்லூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டுக்கு 2 குழுக்கள் வீதம் மருத்துவ குழு அமைத்துள்ளனர். இந்த குழுவினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்து வருகின்றனர். ஆனாலும் காய்ச்சல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கு காரணம் என்ன?

கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சல் சிக்கன் குனியாவா, டெங்குவா அல்லது எந்தவகையிலான காய்ச்சல் என்ற மர்மத்திற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. நகராட்சி பகுதியில் கடுமையாக காணப்படும் சுகாதார கேடு தான் காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம் எனவும், அதிகளவில் காணப்படும் கொசுக்கள்தான் காய்ச்சலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் புனரமைப்பு திட்டத்திற்காக பதிக்கப்படும் குழாய்களுக்காக தோண்டப்படும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது நகராட்சி குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, சாக்கடைகள் சங்கமித்து வருவதாகவும், இதனால் காய்ச்சல் பரவுவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கடையநல்லூரில் ஆங்காங்கே கண்முன் தென்படும் அள்ளப்படாத குப்பைகள் ,மூடப்படாத கால்வாய்கள்,தூர்வாரப்படாத குளங்கள் என எங்கு பார்த்தாலும் துருநாற்றத்துடன் கொசுக்களின் ஆக்கிரமித்து காணப்படுவதே இந்த காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம்.
இதனை உண்மையாக்கும் விதமாக சமீபத்தில் கடையநல்லூர்.org யின் குழு நகர் முழுவதும் பயணித்து எங்கெல்லாம் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன என்பதை புகைப்படத்துடன் கடையநல்லூர் மக்களுக்கு மட்டுமின்றி தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இதன் மூலம் மக்கள் சுகாதார விஷயத்தில் ஒரு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல்.உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நகரை சுத்தபடுத்தி கடையநல்லூரை ஆக்கிரமித்துள்ள மர்ம காய்ச்சலை விரட்டியடித்து சுகாதாரமான கடையநல்லூரை உருவாக்க வேண்டும் .மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கடையநல்லூர்.org சார்பில் வைக்கப்பட்டதையொட்டி நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் தாக்கமாக சமீபத்தில் இரண்டு சுகாதார அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவக்கை எடுத்தது பலதரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த காய்ச்சலின் காரணமாக பல உயிர்களைப் பலி கொடுத்தும்,பொருளாதாரத்தை இழந்தும் பரிதவித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில்,நம்முடைய சகோதரர்களாகிய நாம் எளிதாக செய்யக்கூடிய உதவி ஒன்றுதான்.அது தான் பிரார்த்தனை…அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக நம்முடைய சகோதர்கள் அனைவரும் உயிரைப் பறிகொடுத்த குடும்பத்தினருக்கு ஆறுதலாகவும்,மேலும் இன்னும் பாதிக்கப்பட்டு வரும் சகோதர சகோதரிகளுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.

கடையநல்லூரை ஆக்கிரத்துள்ள மர்ம காய்ச்சலை அனைவரும் ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்.நம்மை சார்ந்துள்ள பகுதிகளை சுத்தமாக வைத்து சுகாதாரத்தை பேணுவோம்.

Add Comment