அரசு பஸ்களில் கூரியர், பார்சல் சேவை!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பஸ்களிலும் கூரியர், பார்சல் சர்வீஸ் சேவை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  சட்டபேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தாக்கல் செய்தார். அதில், இடம் பெற்றுள்ள முக்கிய அம்சம் வருமாறு:

*  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் Ampicillin No Prescription செய்வதற்கு எந்த நேரத்திலும், உலகின் எந்த இடத்திலிருந்தும் இணையதளம் மற்றும் செல்போன் வழியாக 30 நாட்களுக்குள் டிக்கெட் எடுக்கும் இ,டிக்கெட் திட்டம் கடந்த அக்டோபர் 3ம் தேதி தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 2011,12ம் ஆண்டில் ரூ.18.74 கோடி செலவில் அதிநவீன 5,000 கையடக்க மின்னணு பயணச்சீட்டு கருவிகள் வாங்க அரசு ஆணை வெளியிடப்பட்டு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, தலைமைக்கட்டுப்பாடு மையத்துடன் இணைக்கப்பட்ட 6 கோட்டங்கள் மற்றும் 19 மண்டலங்களுக்கு உட்பட்ட 250 பணிமனைகளில் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
* தொலைதூர பயணங்களில் பயணிகளுக்கு சிறப்பான வசதி அளிக்கும் பொருட்டு முதல் கட்டமாக 37 இடங்களில் உள்ள பயணவழி உணவகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில் பஸ்களை நிறுத்த கூடுதல் இடவசதி, நியாயமான விலையில் தரமான உணவு, சுகாதார கழிப்பிட வசதி போன்றவை அளிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் ஓய்வுடன் கூடிய புத்துணர்வு பெற இயலும். இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு ஏறத்தாழ ரூ.5 கோடி வருவாய் கிடைக்கும்.
* விபத்து போன்ற அவசர காலகட்டங்களில் பயணிகள் வெளியேறுவதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து புதிய பஸ்களில் அவசரகால வழி அமைக்கப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டமாக இயக்கப்பட்ட, 50 புதிய தொலைதூர பஸ்களில் அவசரகால வழி அமைக்கப்பட்டுள்ளது.
* அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் சர்வீஸ், கூரியர் சர்வீஸ் தொடங்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக கோவை போக்குவரத்து மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.24 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறே அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எப்படி செயல்படுகிறது?

* கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில்  கடந்த செப்டம்பரில் சோதனை  அடிப்படையில்  கூரியர் சேவை தொடங்கப்பட்டது.
* பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* முதல் கட்டமாக தபால் சேவைக்கு 100 பேருந்துகளும், சரக்கு சேவைக்கு 50 பேருந்துகளும் தேர்வு செய்யப்பட்டன.
* தபால் சேவைக்கு ஒரு பேருந்துக்கு தினசரி 25ம், சரக்கு சேவைக்கு தினசரி ரூ.100ம் கட்டணமாக கூரியர் நிறுவனம் செலுத்தவேண்டும்.
* தற்போது இந்த சேவை கோவை- சென்னை, கோவை-திருச்சி, கோவை-ராமேஸ்வரம், கோவை-மதுரை, கோவை-தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
* 150 பேருந்துகளில் ஏற்படுத்த திட்டமிட்டபோதிலும், இதுவரை போதிய பிரசார நடவடிக்கை மேற்கொள்ளாததால் 25க்கும் குறைவான பேருந்துகளில் தான் சேவை வழங்கப்படுகிறது.
* அதிகபட்சமாக 150 கிலோ எடை வரையிலான சரக்கு அனுப்பி வைக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகபட்சமாக 30 கிலோ அல்லது 35 கிலோ சரக்கு தான் அனுப்பி வைக்கப்படுகிறது.
* எடைக்கான கட்டணத்தை கூரியர் நிறுவனம் வசூலிக்கிறது.

Add Comment