ரஷ்ய விமான விபத்து-50 பேர் பலி!

இந்தோனேசியாவில் 50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம் தற்போது பயணிகள் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்த சுகாய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் சோதனை அடிப்படையில் நேற்று இந்தோனேசியாவுக்கு இயக்கப்பட்டது. இதில் இந்த விமானத்தை சோதனையிட வந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த பல்வேறு விமான நிறுவனங்களின் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விமானிகள், விமான சிப்பந்திகள் என 50 பேர் இருந்தனர்.

நேற்று மதியம் இந்தோனேஷியாவின் buy Viagra online ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து சோதனையோட்டமாக புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் தரை கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அது மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் என்ற காட்டுப் பகுதியில் மாயமானது.

இதையடுத்து விமானத்தை கண்டுபிடிக்க இந்தோனேஷிய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சென்றன. சாலக் மலைப் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாயமான விமானம் விபத்துக்குள்ளாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. போலீசார், பொதுமக்கள் உள்பட 800 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 75 முதல் 95 பேர் வரை பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் சுகோய் நிறுவனத்தைச் சேர்ந்த 8 ரஷ்யர்கள், 37 இந்தோனேசியர்கள், பத்திரிக்கையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-oneindiatamil

Add Comment