விக்கிலீக்ஸ்:இந்தியாவை கண்காணிக்க உத்தரவு போட்ட அமெரிக்கா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ரகசியங்களை உளவறிந்து கசியவிடுவதில் புகழ்பெற்ற இணையதளமான விக்கிலீக்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமான Buy Lasix Online No Prescription தகவல்கள் வெளியாகின.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக முயற்சிகளை மேற்கொண்டுவரும் இந்தியாவுக்கு இம்மாத துவக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருந்தார்.

உலகமெங்கும் செயல்படும் 270 அமெரிக்க தூதரகங்களிலிருந்து வாஷிங்டனிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அளித்துவரும் அன்றாட ரகசிய தகவல்களின் ஆவணங்களை ’கேபிள் கேட்ஸ்’ என்று சுயமாக அழைக்கப்படும் ஆவணத் தொகுப்பை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு கிடைத்த தகவல்களில் குறைந்தளவு அபாயத்தைக் கொண்ட ஆவணங்களை மட்டுமே ‘நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்கிலீக்ஸ் உளவறிந்து கசியவிட்ட ரகசிய ஆவணங்களில் புதுடெல்லியிலிருந்து அனுப்பிய 3038 ரகசிய செய்திகளும் அடங்கும். இவற்றில் ஒன்றுதான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் கண்காணிக்க ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு.

2009 ஜூலை மாதம் நடந்த சம்பவம் இது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான நாடுகளில் தாம்தான் முதலாவதாக இருப்பதாக இந்தியா தன்னைத்தானே (self appointed frontrunner) கூறிக்கொள்வதாக ஹிலாரி கேலியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா தலைமையகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளைக் குறித்து அனைத்து தகவல்களையும் சேகரிக்கவும், இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தைக் குறித்த தகவல்களை ஆராயவும் ஹிலாரி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுடைய நட்பு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் அமெரிக்கா நடத்தும் உளவு வேலைகளையும் அந்நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அமெரிக்காவின் மிருதுவான அணுகுமுறைகளையும் வெளிப்படுத்துவதுதான் தாங்கள் வெளியிடும் ரகசிய ஆவணங்களின் நோக்கம் என ஜூலியன் அஸன்ஜா தலைமையிலான விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வெளியே கூறுவதையல்ல உள்ளே கூறுவது என விக்கிலீக்ஸ் கூறுகிறது.

Add Comment