விக்கிலீக்ஸ்:காஸ்ஸா மீது தாக்குதல் நடத்துவதை முன்னரே அப்பாஸிற்கு தெரிவித்திருந்தது இஸ்ரேல்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல் குறித்து முன்னரே ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட ஃபத்ஹ் தலைவர்களுக்கும், எகிப்திற்கும் தகவலை Levitra online இஸ்ரேல் தெரிவித்திருந்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய தூதரக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யஹூத் பாரக் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிக் குழுவிடம் தெரிவித்த விபரங்கள்தான் இதில் அடங்கியுள்ளன.

ஆபரேசன் காஸ்ட் லீட் என்றழைக்கப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலைக் குறித்து எகிப்து மற்றும் ஃபத்ஹ் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டதாகவும், ஹமாஸை தோற்கடித்தால் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை ஏற்பதற்கு விருப்பமுண்டா? என விசாரித்ததாகவும் பாரக் கூறுகிறார். ஆனால், இருவரும் வாக்குறுதியை மீறியதாக 2009 ஜூன் மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட உரையாடலில் கூறப்பட்டுள்ளது. இதனைக் குறித்து இஸ்ரேல் பதிலளிக்கவில்லை.

Add Comment