நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் இலவச கலர் டிவிக்கான சர்வீஸ் சென்டர்கள் மூடல்

நெல்லை,தூத்துக்குடி,குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இலவச கலர் டிவிக்கான சர்வீஸ் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள சர்வீஸ் சென்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இதில் பல்வேறு கம்பெனிகள் பங்கேற்று டிவிக்கள் உற்பத்தி செய்வதற்கு உரிமம் பெற்றன. தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு 30 ஆயிரம் டிவிக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2007ம் ஆண்டு 25 லட்சம் கலர் டிவிக்களும், 2008ம் ஆண்டு 37 லட்சத்து 50 ஆயிரம் கலர் டிவிக்களும், 2009ம் ஆண்டு 50 லட்சம் டிவிக்களும், 2010ம் ஆண்டு 50 லட்சம் டிவிக்களும், 2011ம் ஆண்டு 10 லட்சம் டிவிக்களும் என மொத்தம் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் கலர் டிவிக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்காக செலவழித்த மொத்த தொகை 3 ஆயிரத்து 714 கோடியே 33 லட்சத்து 75 ஆயிரத்து 990 ரூபாயாகும்.

Buy cheap Bactrim justify;”>இந்த டிவிக்கள் அனைத்தும் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆறுகட்டங்களாக தமிழக மக்களுக்கு 2 ஆண்டுகள் கம்பெனி வாரண்டியுடன் இலவசமாக வழங்கப்பட்டன.

2 ஆண்டுகளுக்கு இடையில் ரிப்பேர் ஆகும் இலவச டிவிக்களை சரி செய்வதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 250க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்கள் துவங்கப்பட்டன. சர்வீஸ் செய்வதற்கான உதிரி பாகங்களையும் அந்தந்த கம்பெனிகளே வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருந்ததால் சர்வீஸ் சென்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்களை டிவி தயாரிப்பு கம்பெனிகளே வழங்கிவந்தன. மேலும் ஒரு டிவிக்கு 12 ரூபாய் டிவி தயாரிப்பு கம்பெனிகள் சர்வீஸ் சென்டர்களுக்கு வழங்கிவந்தன.

இந்நிலையில் கடந்த 2010,11 இரு ஆண்டுகளில் சுமார் 60 லட்சம் டிவிக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இந்த டிவிக்களுக்கு 2013ம் ஆண்டு வரை வாரண்டி உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதனால் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் சர்வீஸ் சென்டர்களுக்கு வழங்கவேண்டிய உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களுக்கு வழங்கவேண்டிய பணத்தை வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் ரிப்பேர் ஆகும் டிவிக்களை சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டு செல்லும்போது, சர்வீஸ் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து இலவச கலர் டிவி சர்வீஸ் சென்டர் உரிமையாளர் மகாத்மா கூறியதாவது:
கடந்த 2006ம் ஆண்டு முதல் இலவச கலர் டிவிக்கான சர்வீஸ் சென்டர் நடத்திவருகிறேன். நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இலவச டிவிக்களை சர்வீஸ் செய்து வருகிறேன். கடந்த இரு ஆண்டுகளாக இலவச டிவி சர்வீஸ் செய்த பணம் வரவில்லை. ஆனால் தமிழக அரசிடம் இருந்து டிவி தயாரிப்பு நிறுவனங்கள் பணம் வாங்கிகொண்டு, எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவருகின்றனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய எல்காட் நிறுவனம் மவுனம் சாதிக்கிறது. எனவே வேறு வழியில்லாமல் 7 மாவட்டங்களில் உள்ள சர்வீஸ் சென்டர்களை மூடியுள்ளேன். இதுபோல் மற்ற மாவட்டங்களில் உள்ள சர்வீஸ் சென்டர்களும் நஷ்டத்தில் செயல்பட்டுவருகிறது. அவர்களும் விரைவில் சர்வீஸ் சென்டர்களை மூடப்போவதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Add Comment