60-ம் ஆண்டை கொண்டாடும் இந்திய பாராளுமன்றம்!

இந்திய பாராளுமன்றம் உலகிலேயே ஜனநாயக ரீதியாக அதிக மக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்யும் உறுப்பினர்களின் அவையாக செயல்பட்டு வருகிறது.
இந்திய 1947-ல் சுதந்திரம் அடைந்தது. அதைத்தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிரதமராக பதவியேற்று கொண்டார். அப்போது இந்தியாவுக்கு வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய அரசியல் சட்டமே இருந்து வந்தது. எனவே இந்தியாவுக்காக தனி அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு முதல் பாராளுமன்ற தேர்தல் 1952-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் 17-ந்தேதி பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. மே மாதம் 13-ந்தேதி முதல் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதன் 60-வது ஆண்டை கொண்டாடும் வகையில் நேற்று பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்திய பாராளுமன்றம் உலகின் சிறப்பு வாய்ந்த பாராளுமன்ற அமைப்பாக கருதப்படுகிறது.பாராளுமன்றம் மேல்சபை, மக்களவை என இரு அவைகளாக செயல்படுகின்றன. மேல்சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. மேல்சபை உறுப்பினர்களை மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்கிறார்கள்.
இவர்களில் 12 உறுப்பினர்களை அரசு நேரடியாக நியமனம் செய்கிறது. மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545. அதில் 2 உறுப்பினர்களை அரசு நியமனம் செய்கிறது. இரு அவைகளிலும் நிதி தொடர்பான மசோதாக்கள் விவாதங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படுகின்றன. சட்டங்களும் இயற்றப்பட்டு விவாதங்கள் நடத்தி முடிவு எடுக்கின்றனர். பாராளுமன்றத்துக்கு இதுவரை 15 தடவை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிக தடவை காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது.
பாராளுமன்ற கூட்டம் 3 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. முதலாவதாக பட்ஜெட் கூட்டம் நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை நடைபெறுகிறது. 20-ல் இருந்து 35 நாட்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. அடுத்ததாக மழைக்கால கூட்டத்தொடர் ஜூலையில் இருந்து ஆகஸ்டு வரை நடத்தப்படுகிறது. இந்த கூட்டமும் 20-ல் இருந்து 35 நாட்கள் வரை நடைபெறும். 3-வதாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் 20-ல் இருந்து 34 நாட்கள் வரை நடைபெறும்.
மேல்சபையில் துணை ஜனாதிபதி தலைவராக இருந்து சபையை நடத்துவார். மக்களவையில் சபாநாயகர் தலைவராக இருந்து சபையை நடத்துவார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதித்து எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமல்லாமல் வேறு சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக பல்வேறு Cialis No Prescription குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மூத்த எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு செயல்படும். இந்த குழுக்கள் எடுக்கும் முடிவுகள் பாராளுமன்ற ஒப்புதலுக்கு பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். நாட்டின் முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு பதவியேற்றார்.
அதைத்தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், வாஜ்பாய், தேவேகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்துள்ளனர். முக்கிய நிகழ்வுகள்.
-malaimalar

Add Comment