துபாயில் த‌மிழ‌க‌ நீதிய‌ர‌ச‌ருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் சார்பில் 22.05.2010 ச‌னிக்கிழ‌மை மாலை துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரில் சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ ம‌துரை கிளையின் நீதிய‌ர‌ச‌ர் ஜி.எம். அக்ப‌ர் அலி அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

ஈடிஏ அஸ்கான் ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம். அக்ப‌ர் கான் த‌லைமை தாங்கினார். துவ‌க்க‌மாக‌ ஜ‌மால் முஹைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஜாபர் சித்தீக் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

நீதிய‌ர‌ச‌ர் அக்ப‌ர் அலி குறித்த‌ அறிமுக‌ உரையினை அப்துல் சுக்கூர் நிக‌ழ்த்தினார். ஈடிஏ எம்.என்.இ. எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம். அன்வ‌ர் பாஷா உழைப்பின் மூல‌மே உய‌ர்வு பெற‌லாம் எனும் க‌ருத்தை வ‌லியுறுத்திப் பேசினார்.

ஏற்புரை நிக‌ழ்த்திய‌ நீதிய‌ர‌ச‌ர் ஜி.எம். அக்ப‌ர் அலி அவ‌ர்க‌ள் த‌ன‌க்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌வேற்பு நிக‌ழ்வு குறித்து ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌ நிர்வாகிக‌ளுக்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார். த‌ன‌து க‌ல்லூரி நாட்க‌ள் குறித்த‌ ம‌ல‌ரும் நின‌வுக‌ளை நினைவு கூர்ந்தார். மேலும் தான் க‌ல்வி க‌ற்ற‌ அனுப‌வ‌ம் குறித்தும், க‌ல்வியின் மூல‌மே உய‌ர்நிலையினை அடைய‌ முடியும் என்ப‌த‌னை ப‌ல்வேறு buy Lasix online உதார‌ண‌ங்க‌ளுட‌ன் விவ‌ரித்தார். ச‌ட்ட‌ விழிப்புண‌ர்வு பெற‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்தும் வ‌லியுறுத்தினார்.

அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி அவ‌ர்க‌ள் பிறைமேடை இத‌ழை அறிமுக‌ப்படுத்த‌ நீதிய‌ர‌ச‌ர் ஜி.எம். அக்பர் அலி, எம். அன்வ‌ர் பாஷா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.

ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ம், ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம் ஆகிய‌வ‌ற்றின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌர‌விக்க‌ப்ப‌ட்டார்.

ஜ‌மால் முஹ‌ம்ம‌து கல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் சார்பில் விரைவில் ந‌டைபெற‌ இருக்கும் மேற்ப‌டிப்பு வ‌ழிகாட்டி நிக‌ழ்ச்சி குறித்து ப‌ரீஜ் அஹம‌து விவ‌ரித்தார்.

நிக‌ழ்வில் ஈடிஏ அஸ்கான் மேலாள‌ர் ஹ‌மீது கான், ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம், ம‌துக்கூர்.காம் முஹ‌ம்ம‌து இசாக், ஜமால் முஹைதீன், ஜாஹிர் உசேன், கமாலுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர். ஜாப‌ர் சித்திக் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார்.
முதுவை ஹிதாய‌த் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

Add Comment