ஸ்பாட் பிக்சிங்கில் மேலும் 4 பாகிஸ்தான் வீரர்களுக்கு பங்கு: புக்கி மசார்

கடந்த 3 மாதங்களுக்கு முன் ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் முக்கிய ஆளாக இருந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த புக்கி மசார் மஜீத். நேற்று அவர் மேலும் 4 பாகிஸ்தான் வீரர்களுக்கு மேட்ச் பிக்ஸிங்கில் பங்கு உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட கேப்டன் சல்மான் பட், முஹம்மது ஆசிப், முஹம்மது ஆமிர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இது Levitra No Prescription குறித்து பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் சேனல் கூறியிருப்பதாவது,

எங்களுக்கு மசார் மஜீதிடம் இருந்து புதிய வீடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் உமர் அக்மல், வஹாப் ரியாஸ், கம்ரான் அக்மல் மற்றும் இம்ரான் பர்ஹத் ஆகியோர் தனக்கு ஸ்பாட் பிக்சிங்கில் உதவியதாகவும், அவர்களுக்கும் தான் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ஷஹித் அப்ரிடி, யூனிஸ் கான், அப்துல் ரசாக் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், சயீத் அஜ்மல் ஒரு ஆன்மீகவாதி, அவரை பிக்சிங் வேலைக்கு உபயோகப்படுத்த முடியாது, அதைக் கூறினால் அவர் அதிர்ச்சி அடைந்து விடுவார் என்றும் மஜீத் கூறியுள்ளார்.

மஜீத் மூத்த வீரர்களை விட்டுவிட்டு இளம் வீரர்களையே குறி வைத்ததாகவும் தெரிவி்த்துள்ளார் என்று அது கூறியுள்ளது.

பாகிஸ்தான் தேர்வாளர்கள் வரவிருக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் கம்ரன் மற்றும் இம்ரான் பர்ஹத் ஆகியோரை சேர்க்கவில்லை. ஆனால் உமர் அக்மலும், வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறுகையில், மசார் மஜீத் விளையாட்டு வீரர்களுக்கு ஏஜென்ட் தான். அவர் ஒரு புக்கி என்பதே அவர்களுக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

Add Comment