இன்று இரவு முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக்-பெட்ரோல், காஸுக்குப் பஞ்சம் வரும்

இன்று இரவு முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, காய்கறி உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை சீரமைக்க கோரி வருகிற 5-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. சுங்கவரி பிரச்சினை தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இது வரை எந்த சுமூக முடிவும் அறிவிக்கப்படவில்லை. எனவே லாரிகள் வேலைநிறுத்தம் உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 74 லட்சம் லாரிகள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 97 ஆயிரம் சரக்கு வாகனங்கள் உள்ளது. இவை அனைத்தும் ஓடாது.

இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட் ரோல்,டீசல் ஏற்றிவரும் டேங்கர் லாரிகளின் உரிமை யாளர்கள் சங்கம், துறைமுக தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள். சங்கம், டேக்சி ஓட்டுனர்கள் சங்கம், அனைத்து மோட்டார் சங்கம், லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம், ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான், அரி யானா, பஞ்சாப் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகள் இன்று முதல் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து 5 ஆயிரம் லாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று வருவது உண்டு.

அந்த லாரிகளுக்கான சரக்கு ஆர்டர் எடுக்கப்படவில்லை. 3 மாவட்டத்தில் இருந்தும் சுமார் 15 ஆயிரம் லாரிகள் வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மஞ்சள், முட்டை, இரும்பு, மரங்கள், நிலக்கரி போன்றவை கொண்டு செல்ல முடியவில்லை.

இதே போல வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சரக்குகள் ஏற்றி வரக்கூடிய லாரிகளும் இன்று புறப்படவில்லை. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் லாரிகளின் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை உள்பட பல நகரங்களுக்கு வரக்கூடிய பழங்கள், காய்கறிகள், ஜவுளி வகைகள், அரிசி, மார்பிள்ஸ் போன்றவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் அத்தியாவசிய பொருட்கள் வருவதில் தடை ஏற்படுவதால் விலை உயர வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்மபுரியில் நேற்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன துணை தலைவர் நாட்டான் buy Lasix online எம்.மாது கூறுகையில்,

தர்மபுரியில் இருந்து சென்னைக்கு 4 சுங்க சாவடிகளை கடந்து ரூ. 400 கட்டணத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் 2 சுங்கசாவடிகளை கடந்து சேலத்துக்கு செல்ல ரூ.350 க்கு மேல் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் சுங்கச்சாவடிகள் உள்ளன.

வங்கிகடனில் லாரி எடுத்த உரிமையாளர்கள் மாதத் தவணையாக ரூ.25 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். ஆனால் சுங்கச்சாவடிக்கு மாதம் ரூ. 35 ஆயிரம் வரை செலுத்த நேரிடுகிறது. ஆண்டுக்கு ரூ. 3லட்சம் செலவிடும் நிலையுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய சுங்கச்சாவடிகளில் கி.மீ.ஒன்றுக்கு ரூ. 1.40 சுங் கக்கட்டணம் என்றால், தனியார் சுங்கச்சாவடிகளில் கி.மீ. ஒன்றுக்கு ரூ. 3 வசூலிக்கின்றனர்.

எனவே நாடு முழுவதும் ஒரே சீரான சுங்கவரி வசூலிக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பாக டிசம்பர் 5-ந் தேதி முதல் நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் உள்ளன.

இவை தேசிய அனுமதி பெற்றிருப்பதால் வட மாநிலங்களுக்கு சரக்குகள் எடுத்து செல்கின்றன. தற் போது சரக்குகளை லாரிகளில் ஏற்றி வட மாநிலங்களுக்கு சென்றால் குறைந்தது ஒருவாரமாகும். அதற்குள்ளாக ஸ்டிரைக் வந்து விடும். இடையில் சரக்குகளுடன் லாரிகள் நிறுத்தப்பட்டால் இழப்பீடுக்கு லாரி உரிமையாளர்களே பொறுப்பு. எனவே இன்று (1-ந்தேதி) நள்ளிரவு முதலே தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லாரிகள் நிறுத்தப்படும்.

காய்கறிகள், பழங்கள், கிரானைட் கற்கள், மாம்பழ ஜூஸ், ஆகியவை பெருமளவு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தே பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. லாரிகள் நிறுத்தப்பட்டால் இத்தகைய பொருள்கள் கொண்டு செல்வது தடைப்படும் என்றார்.

இந்த ஸ்டிரைக்கில் டேங்கர் லாரிகளும் பங்கேற்கவுள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல சாமையல் எரிவாயு சிலிண்டர்களும் தட்டுப்பாட்டை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சிலிண்டர் பதிவு செய்தால் வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஸ்டிரைக்கால் இது மேலும் மோசமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Add Comment