கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!

மே 19,கடையநல்லூரில் பாப்பான் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்டகாலமாக விவசாயிகளின் பிரதான பிரச்சனையாக கருதப்படும் பாசனத்திற்கு சரியான முறையில் தண்ணீர் வரத்து இல்லை என்பது. திருநேல்வேலியில் நடந்த விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய பிரச்சனை பற்றி முறையிட்டனர். வீரசிகாமணி,சேந்தமரம் மற்றும் அதை ஒட்டியுள்ள 34 குழங்களுக்கு பாசனத்திற்காக நேரடியாக வரக்கூடிய தண்ணீர் சரியான முறையில் வரவில்லை.இதற்க்கு காரணமான பாப்பன் கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விவசாயத்திற்கு கிடக்கும் முறையான தண்ணீரை வழங்க ஆவன செய்யுமாறு முறையிட்டனர்.இதனை தொடர்ந்து இன்று காலை போதுபனைத்துரையினர் பாப்பன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றினர்.

பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான சர்வே இடம் குறியீடு செய்யப்பட்ட நிலையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. இப்பணி துவங்கிய சில நிமிடங்களிலேயே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குவிய தொடங்கினர்.

ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து எந்த தகவலும் முறையாக தெரிவிக்கப்படவில்லை எனவும், ஏற்கனவே கடந்த பல மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், வீடுகளை அகற்றக்கூடாதெனவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். இதனிடையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையநல்லூர் சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் அருகேயுள்ள திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

ஏராளமான ஆண்களும், பெண்களும் மறியலில் ஈடுபட்ட நிலையில் தாசில்தார் தேவபிரான், டிஎஸ்பி ஜமீம், இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் சிவன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் மறியிலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து தடைபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனிடையில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் மறியிலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் தமிழக அரசை கண்டித்தும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிடக் கோரியும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து செல்ல துவங்கினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பணிகளை நிறுத்திவிட்டு வரத்துவங்கின.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வருவாய்துறை, போலீசார் சமரச பேச்சுக்காக கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். பஸ்மறியல் கைவிடப்பட்ட நிலையில் சமரச பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்தது. பேச்சுவார்த்தையில் Buy Lasix ஆர்டிஓ ராஜகிருபாகரன், தாசில்தார் தேவபிரான், டிஎஸ்பிக்கள் ஜமீம், ஹலிபுல்லா, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) தங்கராஜ், பொதுப்பணித்துறை எஸ்டிஓ சிவக்குமார், உதவி பொறியாளர்கள் மணிகண்டராஜன், சுப்பிரமணியன், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாப்பான் கால்வாயில் இருபுறமும் சுமார் 5 அடி அகலத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத பட்சத்தில் வரும் 26ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றிட பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும்போது பாப்பான் கால்வாயில் 0 பாய்ண்ட் முதல் கடைசி எல்கை வரையுள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக சர்வே மேற்கொண்டு அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எனவும் பேசப்பட்டது.

இதனிடையில் பாப்பான் கால்வாயில் கழிவுகள் அதிகளவில் இருப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், இக்கால்வாயை சுத்தம் செய்திடவும் பொதுமக்கள் சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கம் போல் போக்குவரத்து எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபெறுகிறது.

தகவல்:நாராயணன்

புகைப்படங்கள்:பஷீர்,ராஜ்

%%wppa%%

%%slide=115%%

Add Comment