பெட்ரோல் விலை உயர்வு : நிதியமைச்சர் பிரணாப் தகவல்

“பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக மத்திய அமைச்சரவையில் மீண்டும் விவாதிக்கப்படும்’ என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். மும்பையில் இந்திய காப்பீட்டு மைய துவக்க விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி மேலும் கூறியதாவது:பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும்’ என, கிரீத் பரேக் Buy Doxycycline Online No Prescription கமிட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததன் பேரில், நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், இதில், சில அமைச்சர்கள் பங்கேற்காததால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது தொடர்பாக எந்தமுடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிரீத் பரேக் கமிட்டி அறிக்கை தொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது.உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பங்கு சந்தையில் ஸ்திரமற்ற தன்மை காணப்படுகிறது. இது தொடர்பாக தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். பங்குச் சந்தை நிலவரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் பீதியடைய வேண்டாம்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

Add Comment