ஆந்திர அரசுக்கு மேலும் நெருக்கடி-புது அமைச்சர் ராஜினாமா

நேற்று காலை பதவியேற்ற ஆந்திர அமைச்சர்களில் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று காலை ஆந்திர முதல்வர் கிரன் குமார் ரெட்டி தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். இதில் பல அமைச்சர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் வட்டி வசந்த குமார் இரவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறை ஏமாற்றம் Buy Lasix Online No Prescription அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பல அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை பிடிக்காமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வது பற்றி சிந்தித்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை முதல்வர் கலந்து கொள்ளும் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் தங்கள்
அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment