கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!

அவசர தேவை! அவசிய வேண்டுகோள்!

டெங்கு காய்ச்சல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்,21/5/2012 அன்று இரவு 7 மணி அளவில் கடையநல்லூர் ரியாளுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.இதில் Viagra No Prescription கடையநல்லூர் ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாஅத் கூட்டத்தை ஜனாப் எஸ்.எம். ஹாஜா முஹைதீன் அஸ்லமி அவர்கள் தலைமை ஏற்றார்கள்.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை – (சென்னை)கூடுதல் இயக்குனர், DR.திரு குழந்தி சாமி அவர்கள் தேங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசுக்கள் எவ்வாறு உற்பத்தி ஆகின்றன?அந்த கொசு ஏற்படுத்தும் நோட்டின் அறிகுறிகள் என்னென்ன?அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்?என்பதனைத் தெளிவாக விளக்கிக் கூறினார்கள்.

அவர் மேலும் கூறுகையில்,
இக்கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, மத்திய அரசாலோ,மாநில அரசாலோ, நகராட்சி நிர்வாகத்தலோ, சுகாதாரத் துறையாலோ அல்லது மருத்துவத் துறையாலோ மட்டும் இயலாது.மாறாக பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்காத வரை இந்த நோயினை முழிமையாக ஒழிக்க முடியாது,மாறாக பொது மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகள்,தங்கும் விடுதிகள்,அலுவலகங்கள், தொழில் செய்யுமிடங்கள்,கடைகள்,அதிலும் குறிப்பாக ஹோட்டல்கள்,டீ கடைகள் முதலியவற்றை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் வைத்திருப்பது கட்டாய கடமையாகும் என்று வலியுறுத்தி,கீழ்க் காணும் ஒழுங்கு முறைகளைத் தவறாது மறவாது பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துமாறு கூறினார்.

பொதுமக்களுக்கு கொசுத் தடுப்பு குறித்த ஓர் அன்பான வேண்டுகோள்!
சமீப காலமாக கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கீழ்க்கண்ட விசயங்களில் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 ) குடிநீரைக் காய்ச்சி ஆற வைத்து குடிக்கக வேண்டும்,
2 ) வீட்டிற்குள் தண்ணீர் தேக்கி வைத்திருக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் மெல்லிய துணிகளால் இருக்க மூடி வைக்க வேண்டும்,
3) நகராட்சி பாணியாளர்கள் கொசுப் புழுக் கொல்லி மருந்து ஊற்ற வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,
4) வாரம் ஒரு முறை தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் தொட்டிகளை சுத்தமாகக் கழுகி காய வாய்த்த பிறகு புதிதாக தண்ணீரைப் பிடிக்க வேண்டும்,
5) புகை மருந்து அடிக்க நகராட்சி பணியாளர்கள் வரும்போது வீடுகளுக்குள் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்,
6) காய்ச்சல் கண்டவர்களை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும்.

மேலும் ,கடையநல்லூர் ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பாக நமதூருக்குத் தேவையான சுகாதார நிலை பாடுகளை
சரி செய்து தர சம்பந்தப்பட்ட அரசுத் துறையினருக்கும்,அமைச்சர் அவர்களுக்கும் மற்றும்நகராட்சி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.அவையாவன,
1) நகராட்சி சார்பில்,அனைத்து இடங்களையும் குறிப்பாக வியாபாரத் தளங்களைப் பார்வையிடுதல்,சுகாதார சீர்கேடுகளை சுத்தம் செய்தல்,
2) நமதூர் மற்றும் தென்காசிக்கு இரத்த அணுக்களைப் பிரித்தெடுக்கும் எந்திரம் கொண்டுவருதல்,
3) நமதூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் அனைத்து வகையான மருத்துவர்களையும் நிரப்புதல்,
4) நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வருதல் (P.H.C)
5) நமதூர் அரசு போது மருத்துவ மனையில் உள்ள அனைத்து எந்திரங்களையும் இயக்க தேவையான மருத்துவர்களை நிரப்புதல்,
6) குறிப்பாக இரவு நேர மருத்துவர்களைக் கட்டாயமாக பணியில் இருக்கச் செய்வது போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன…

சுகாதாரக்குழுவில் கலந்து கொண்டவர்கள் விபரம்,
டாக்டர்.குழ்சந்தை சாமி அவர்கள்,
கூடுதல் இயக்குனர்,
போது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை,
சென்னை.

கி. குமார்,
முது நிலை பூச்சியியல் வல்லுநர்,
தஞ்சாவூர்.

முஹைதீன் அப்துல் காதர்,
முதுநிலை பூச்சியியல் வல்லுநர்,
ஓஊர்.

டாக்டர். ஜெமினி,
நல அலுவலர்,
போது சுக்கதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை,
சென்னை.

ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தில் விளக்கமளித்தனர்.

Add Comment