காம்பிர் மீண்டும் கேப்டன்: ஜாகிர் கான் வாய்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கவுதம் காம்பிர் நீடிக்கிறார். ஜாகிர் கான், அணிக்கு திரும்பியுள்ளார். சுரேஷ் ரெய்னா, ஸ்ரீசாந்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி, தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் எஞ்சிய போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூன்றாவது போட்டி(டிச.4, வதோதரா) மற்றும் நான்கு(டிச.7, பெங்களூரு), ஐந்தாவது(டிச.10, சென்னை) போட்டிக்கென இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
“சீனியர்’கள் ஓய்வு:
தோனி, சச்சின், சேவக், ஹர்பஜன் ஆகிய சீனியர் வீரர்களுக்கு தொடர்ந்து ஓய்வு அளிக்கப்படுகிறது. கேப்டன் பதவியில் காம்பிர் நீடிக்கிறார். தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்த மீண்ட வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் அணிக்கு திரும்புகிறார். பிரவீண் குமார் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கடந்த இரு போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஸ்ரீசாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பார்த்திவ் மகிழ்ச்சி:
நான்கு மற்றும் ஐந்தாவது போட்டிக்கான அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள சகாவுக்கு பதில், விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல வினய் குமாருக்கு பதில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். சுமார் ஆறரை ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார் பார்த்திவ் படேல். இது குறித்து இவர் கூறுகையில்,””சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் அதிக ரன் குவித்தேன். எனது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகிளில் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் மிகச் சிறப்பாக செயல்படுவேன்,”என்றார்.
மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி:
காம்பிர்(கேப்டன்), முரளி விஜய், விராத் கோஹ்லி, யுவராஜ், சவுரப் திவாரி, யூசுப் பதான், சகா, அஷ்வின், ஜாகிர் கான், நெஹ்ரா, பிரவீண் குமார், முனாப் படேல், ரவிந்திர ஜடேஜா, வினய் குமார்.
மெக்கலம் சந்தேகம்
இந்திய, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை வதோதராவில் நடக்கிறது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நியூசிலாந்து, இம்முறை Buy Viagra கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்குகிறது. அணியின் நட்சத்திர வீரரான பிரண்டன் மெக்கலம் முதுகு வலியால் அவதிப்படுவது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து அணியின் மீடியா மானேஜர் எல்லரி தபின் கூறுகையில்,””மெக்கலம் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். லேசான முன்னேற்றம் தெரிகிறது. மூன்றாவது போட்டியில் பங்கேற்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது,”என்றார்.

Add Comment