கடையநல்லூர் :முதல்வர் உத்தரவு அமுல்படுத்தப்படுமா?

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து 31 பேர் பலியாகிவிட்டதை அடுத்து காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் செனன்னையில் நடந்த ஆலாசனை கூட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. கடையநல்லூர் நகராட்சியை பொறுத்தவரை கடந்த 17ம் தேதி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய், தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் நல்ல தண்ணீர் மூலமாக தான் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், தண்ணீரை சேமிக்காமல் பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படுமென முதல்வர் உத்தரவிட்டதை Buy Ampicillin அடுத்து கடையநல்லூர் நகராட்சியில் கடந்த 23ம் தேதி முதல் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக மேற்கொள்ளப்பட இருந்த ஒரு வார குடிநீர் கட் என்ற அறிவிப்பு கைவிடப்பட்டது. முதல்வரின் உத்தரவை தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கை நேற்று நகராட்சி அலுவலகத்தில் காணப்பட்டது

கடையநல்லூர் நகராட்சியை பொறுத்தவரை குடிநீர் வினியோகம் என்பது கோடைகாலம் என்றாலும், மழைக்காலம் என்றாலும் 3 நாட்களுக்கு ஒருமுறை தான் இருந்து வருகிறது. இந்நகராட்சியை பொறுத்தவரை பெரியாற்று படுகை மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் நீர் ஆதாரங்களை கொண்டு குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி தண்ணீரை பொறுத்தவரை நாளொன்றிற்கு சுமார் 34 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தாலும், தாமிரபரணி தண்ணீர் சீராக சப்ளை செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

முதல்வரின் உத்தரவினை நிறைவேற்றும் வகையில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் ஒதுக்கீடு செய்யப்பட்ட லிட்டர் அளவிற்கு கிடைக்கபெறுமா என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எப்படியாவது குடிநீரை தினமும் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் கிடைக்கப்பெறாத மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்திட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.

Add Comment